2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மாடலின் ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

புத்தம் புதிய தார் மாடலை மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இரண்டாம் தலைமுறை தார் தற்சமயம் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள ஆக்ஸஸரீகள் காரை குறித்த பல தகவல்களை நமக்கு தெரிவிக்கின்றன. வெளிப்புற ஸ்டைலிங் தொகுப்பு, தீவிர க்ரோம் தொகுப்பு, க்ளாடிங்ஸ், க்ரோம் அப்ளிகேஷ்கள், மழை விசர், பாடி டெக்கால் உள்ளிட்ட சந்தைக்குப்பிறகான பாகங்களை மஹிந்திரா நிறுவனம் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளாக வழங்க வாய்ப்புள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

வாடிக்கையாளர்கள் சீட் கவர், ஸ்டீயரிங் கவர், லேமினேஷன் பாய், காந்த சன்ஷேட் போன்றவற்றையும் தேர்வு செய்ய முடியும். அதேபோல் வெளிப்புற ஸ்டைல் தொகுப்பிற்கு, வாடிக்கையாளர்கள் முன் க்ரில்லில் சேர்க்கக்கூடிய பாகங்களையும் பெறுவார்கள், இதன் மூலம் க்ரில் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாறிவிடும்.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

மேலும் ORVM அப்ளிகேஷ்கள், முன் பம்பர் உறைப்பூச்சு, பம்பர் ஏர் அணை, சக்கர வளைவு உறைப்பூச்சு, டெயில் விளக்கு அப்ளிகேஷ்கள் மற்றும் பக்க & தோள்பட்டை பயன்பாடுகளையும் மஹிந்திரா நிறுவனம் தாரின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக வழங்கவுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் முன் விளக்கு, கதவு கைப்பிடிகள், ஹெட்லேம்ப், மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவற்றில் க்ரோம்-ஐ சேர்ப்பதற்கு க்ரோம் தொகுப்பும் தற்போது கசிந்துள்ள ஆவணங்களில் உள்ளன. பிழை விலக்கி, பக்கவாட்டு உறைப்பூச்சு, ஹெட்லேம்ப் அப்லிக், பக்கவாட்டு பகுதி டெக்கால், 18 அங்குல அலாய் சக்கரங்கள், அலாய் சக்கர ரிங், ஸ்டீயரிங் வீல் கவர், மாடி லேமினேஷன் பாய் போன்றவை மற்ற ஆக்ஸஸரீகளாக உள்ளன.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

வாடிக்கையாளர்கள் இரண்டாவது வரிசை பயணிகளுக்கு கூடுதல் ஸ்பீக்கர்கள், மட்கார்ட்ஸ், ஏஎக்ஸ் தொடருக்கான சாவி இல்லாத நுழைவு போன்ற பல பாகங்களையும் கூட தேர்வு செய்யலாம். மேலும் வெவ்வேறான க்ரில் அமைப்புடன் 2020 தார் மாடல் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டதையும் பார்த்திருப்போம்.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

இதனால் இவை பின்னர் காலத்தில் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படலாம் என தெரிகிறது. அதற்கு முன்னதாக தற்போதே 2020 தாருக்காக சந்தைக்கு பிறகான க்ரில் அமைப்பை வடிவமைப்பதிலும் கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் ஈடுப்பட துவங்கிவிட்டன. முதல் தலைமுறை காருடன் ஒப்பிடுகையில் பல புதிய வசதிகளை இந்த இரண்டாம் தலைமுறை தார் பெற்றுவரவுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா...? அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...

இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. அதேபோல் குறைவான விகிதத்தில் ட்ரான்ஸ்ஃபர் கேஸ் உடன் 4x4 ட்ரைவ் சிஸ்டத்தையும் 2020 தாரின் அனைத்து வேரியண்ட்களும் வழங்கும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Thar brochure with official accessories leaked before launch
Story first published: Tuesday, September 15, 2020, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X