மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. நாளை முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாறியது. இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்துள்ளனர்.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி பவன் கோயங்கோ தெரிவித்தார். இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

இந்த நிலையில், மஹிந்திரா தார் குறித்து அடுத்து ஒரு ஏமாற்றமான செய்தி வந்துள்ளது. அதாவது, நாளை முதல் (டிசம்பர் 1) புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டீலர் வட்டாரத் தகவல்களும் விலை உயர்வை உறுதிப்படுத்தி உள்ளன.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

அதேநேரத்தில், இன்று வரை முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே, அறிமுகச் சலுகையாக அறிவிக்கப்பட்ட விலை பொருந்தும் என்றும் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு குறித்து மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

ஆனால், மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.40,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இது புதிதாக மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்ய திட்டமிட்டிருப்போருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

இதனிடையே, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை குறைவான ஏஎக்ஸ் வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த முன்பதிவும் விலை உயர்வுக்கு பின்னர் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.9.80 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், பேஸ் வேரியண்ட்டுகளுக்கான புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஆரம்ப விலை 11.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இப்போது கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to reports, The new Mahindra Thar SUV will get a price hike from December 1, 2020.
Story first published: Monday, November 30, 2020, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X