மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிந்து வரும் நிலையில், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு வாரங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக மஹிந்திரா தார் இருந்து வருகிறது. சரியான பட்ஜெட்டில் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி என்ற மதிப்பையும் பெறறிருப்பதால், தற்போதைக்கு ஆகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

இந்தநிலையில், ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மட்டுமின்றி, சாதாரண வகை எஸ்யூவி பிரியர்களையும் கவரும் வகையில் மிரட்டலான தோற்றம், சொகுசு வசதிகள், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அண்மையில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 2ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அன்றைய தினமே முன்பதிவும் துவங்கியது. ஆரம்பம் முதலே முன்பதிவு குவியத் துவங்கி இருப்பதால் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் இந்த புதிய தார் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது. இந்த நிலையில், காத்திருப்பு காலம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த மஹிந்திரா டீலரின் ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

அதில், புதிய மஹிந்திராதார் எஸ்யூவியின் சாஃப்ட் டாப் கூரை அமைப்புடைய மாடலுக்கு 6 முதல் 8 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. கன்வெர்ட்டிபிள் டாப் மாடலுக்கு 8 முதல் 11 வாரங்கள் வரையிலும், ஹார்டு டாப் மாடலுக்கு 20 முதல் 22 வாரங்கள் வரையிலும் அதிகபட்சமாக காத்திருக்க வேண்டி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, இப்போது முன்பதிவு செய்தால் டெலிவிரி பெறுவதற்கு வேரியண்ட்டை பொறுத்து 2 முதல் 5 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.9.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகலில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை என்ற 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு மாற்றும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கார் 226 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றுள்ளது. அதேபோன்று, 650 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை கடக்கும் திறன் வாய்ந்தது.

 மஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

மேலும், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டிஎஃடி திரையுடன் மல்டி இன்ஃபர்மேஷன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், மியூசிக் சிஸ்டம், ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
According to report, the waiting period for the Mahindra Thar is up to 5 months depending on the variant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X