Just In
- 33 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- Sports
விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு
- News
வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா?
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூடுதல் கேபின் வசதிகளுடன் அறிமுகமாகவுள்ள 2021 மாருதி செலிரியோ!! மீண்டும் சோதனை ஓட்டம்
2021 மாருதி செலிரியோ காரின் உட்புற கேபினின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருவது நமக்கு எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். இதனால் 2021 செலிரியோ கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போது மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இந்த மாருதி காரின் சோதனை ஓட்ட ஸ்பை வீடியோ 91 வீல்ஸ் என்ற யூடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கார் எவ்வாறான தோற்றத்தில் இருக்கும் என்பதை மறைப்புகளுடன் அறிய முடிகிறது.

தற்போதைய செலிரியோ காரை காட்டிலும் உருவத்தில் சற்று பெரியதாக உள்ள இந்த 2021 செலிரியோ சோதனை காரின் முன்பக்கம் சற்று திருத்தியமைக்கப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் நேர்த்தியான க்ரில்லை கொண்டுள்ள இந்த சோதனை கார், ஏர் டேம்-ஐ நம்பர் ப்ளேட்டிற்கு கீழே பெற்றுள்ளது.

ஹலோஜன் ஹெட்லைட்கள் காரின் பக்கவாட்டு பகுதிக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளன. இண்டிகேட்டர் விளக்குகள் ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் இல்லாததால், இந்த சோதனை கார் 2021 செலிரியோவின் ஆரம்ப நிலை எல்எக்ஸ்ஐ மாடலாக இருக்கலாம்.

டெயில்கேட் உள்பட அனைத்து கதவுகளும் லிஃப்ட்பேக் கதவு கைப்பிடிகளை பெற்றுவரவுள்ளன. இவற்றுடன் புதிய செலிரியோவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகளும் வழங்கப்படும். இருப்பினும் காரின் பின்பக்கம் பெரும்பான்மையாக தற்போதைய மாடலை தான் ஒத்து காணப்படும்.

இருப்பினும் பின்பக்க பம்பரின் டிசைன் திருத்தியமைக்கப்பட்டிருக்கும். இந்த புதிய பம்பரின் இரு முனைகளிலும் பிரதிபலிப்பான் வழங்கப்படும். காரின் பின் கண்ணாடியின் உயரத்தில் நிறுத்து விளக்கையும் எதிர்பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த சமீபத்திய சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலமாக 2021 செலிரியோ முற்றிலும் புதிய உட்புறத்துடன் வெளிவரவுள்ளதை காண முடிகிறது. இரு கப் ஹோல்டர்களுடன் புதிய மைய கன்சோல் மற்றும் மையத்தில் பொருத்தப்பட்ட முன்பக்க ஜன்னல்கள் ஸ்விட்ச்கள் உள்ளிட்டவை காரின் உட்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களாகும்.

இந்த ஸ்பை படங்களில் 12 வோல்ட் பவர் சாக்கெட்டையும் மைய கன்சோல் கொண்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் எந்த மாற்றமும் இல்லை. 2021 மாருதி செலிரியோவில் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் கே10பி என்ஜின் வழங்கப்படவுள்ளது.

இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் விதத்தில் வழங்கப்படும். புதிய தலைமுறையுடன் விரைவில் சிஎன்ஜி வேரியண்ட்களையும் பெறவுள்ள செலிரியோவின் 2021 வெர்சனின் ஆரம்ப விலை ரூ.4.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.