சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

மிக சவாலான விலையில் மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான க்ராஸ்ஓவர் ரக மாடலாக மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகள் மற்றும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து சில சிறிய மாற்றங்கள் மற்றும் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மாருதி எஸ் க்ராஸ் கார் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

இதுவரை 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார், பிஎஸ்-6 மாசு விதியால் தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு மாறி இருக்கிறது. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

இந்த எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாகவும் வந்துள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் லிட்டருக்கு 18.55 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடலானது ஸிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், கருப்பு வண்ண கிளாடிங் சட்டம், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள், சைடு ஸ்கர்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

தவிரவும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, எஞ்சின் ஸ்டார்ட்- ஸ்டாப் பட்டன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி காரின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.8.39 லட்சம் முதல் ரூ.11.15 லட்சம் வரையிலான விலையிலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.10.83 லட்சம் முதல் ரூ.12.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது மிக சவாலான ஆரம்ப விலையாகவே கருதலாம்.

சவாலான விலையில் புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது

புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு கடந்த மாதம் 24ந் தேதி முதல் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ரெனோ டஸ்ட்டர், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு இணையான ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has launched S Cross with BS6 petrol engine option in India prices starting at Rs.8.39 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X