மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

வரப்போகும் பண்டிகை காலத்திற்காக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய லிமிடேட் எடிசனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

மாருதியின் புதிய ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஎம்டி, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி, இசட்எக்ஸ்ஐ+ மற்றும் இசட்எக்ஸ்ஐ+ ஏஎம்டி என ஸ்விஃப்ட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

ஸ்பெஷல் எடிசனின் விலை வழக்கமான எக்ஸ்ஷோரூம் விலையை காட்டிலும் வெறும் ரூ.24,990 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசனின் ஆரம்ப விலை ரூ.5.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிகப்பட்சமாக ரூ.8.27 லட்சம் என்ற விலையிலும் இந்த கார் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

ரூ.24,990 விலை உயர்த்தியதற்கு ஏற்ப லிமிடேட் எடிசனில் ஏகப்பட்ட காஸ்மெட்டிக் அப்கிரேட்களை மாருதி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இதில் காரின் பக்கவாட்டில் பளபளப்பான கருப்பு நிறத்தில் பாடி கிட், கதவுகளில் விஸர் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

இவற்றுடன் ஹேட்ச்பேக் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பளபளப்பான கருப்பு நிறத்தில் முன்பக்க க்ரில், ஃபாக் விளக்குகள் மற்றும் டெயில்லைட்கள் உள்ளிட்டவை புதிய ஸ்பெஷல் எடிசனிற்கும் தொடர்ந்துள்ளன. உட்புறத்தில் இந்த லிமிடேட் எடிசன் கார் கருப்பு நிறத்தில் இருக்கை கவர்களை பெற்று வந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

இதே நிறம் தான் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் வட்ட வடிவ டயல்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும். இவை தவிர்த்து வேறெந்த மாற்றத்தையும் வழக்கமான ஸ்விஃப்ட்டில் இருந்து இந்த லிமிடேட் எடிசன் பெற்று வரவில்லை. எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்களுடன் விற்பனை செய்யப்படும் மாருதி ஸ்விஃப்ட்டில் அலாய் சக்கரங்கள் 15 இன்ச்சில் வழங்கப்படுகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

உட்புறத்தில் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், 7 இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய மாருதியின் ‘ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ' தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை பெற்றுவரும் இந்த ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ற ஒரு என்ஜின் தேர்வுதான் வழங்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

புதிய ஸ்பெஷல் எடிசனிலும் வழங்கப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகின்றது. டாப் வேரியண்ட்கள் மட்டும் கூடுதலாக ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வை பெறுகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்

மாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் மிக விரைவில் வரவுள்ள பண்டிகை காலத்திற்கு மிக நெருக்கமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக உள்ள மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்பெஷல் எடிசன் நிச்சயம் அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும்.

Most Read Articles

English summary
Maruti Swift Limited Edition launched ahead of festive season
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X