ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

2020 ஆட்டோ எக்ஸ்போ காட்சிக்கு பிறகு விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட்டை இந்திய சந்தையில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட்டிற்கான முன்பதிவை இன்னும் சில நாட்களில் டீலர்ஷிப்கள் மூலம் துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் அனைத்து மாருதி டீலர்ஷிப்களிலும் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ஏற்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

மேலும் இந்த தகவலில் முன்பதிவிற்கான தொகை ரத்து செய்யப்படும் முன்பதிவுகளுக்கு திருப்பி வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் 2020 பிரெஸ்ஸா பிஎஸ்6 மாடலை LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என்ற 4 ட்ரிம் தேர்வுகளில் விற்பனை செய்யவுள்ளது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

இவை மட்டுமின்றி 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இந்த புதிய பிஎஸ்6 காருக்கு வழங்கப்படவுள்ளன. இதில் ஆரம்ப நிலை வேரியண்ட்டான LXi-க்கு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக வழங்கப்படவுள்ளது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

நிற தேர்வுகளின்படி பார்த்தால், இந்த புதிய பிரெஸ்ஸா மாடல் மெட்டாலிக் (சிங்கிள்-டோன்) மற்றும் ட்யூல் டோன் என்ற இரண்டு விதமான பெயிண்ட் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் சிங்கிள் டோனில் வெள்ளை, ப்ரீமியம் சில்வர், க்ரானைட் க்ரே, இலையுதிர் காலத்து ஆரஞ்ச், டார்க் ப்ளூ மற்றும் மின்னும் சிவப்பு உள்ளிட்ட நிற தேர்வுகள் இந்த புதிய பிரெஸ்ஸா மாடலுக்கு வழங்கப்படவுள்ளன.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

ட்யூல் டோனில் சிவப்பு-கருப்பு, க்ரே-ஆரஞ்ச் மற்றும் நீலம்-கருப்பு என்ற மூன்று நிற தேர்வுகளை இந்த பிஎஸ்6 மாடல் பெறவுள்ளது. முன்பதிவு செய்தோருக்கான காத்திருப்பு காலம் இந்த 2020 விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு 6-8 வாரங்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

இந்த கால அளவு வெளிநாட்டு சந்தைக்கான தேவை மற்றும் வேரியண்ட் தேர்வை பொறுத்து மாறக்கூடும். இந்த புதிய 2020 மாடலில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் K-சீரிஸ் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

இந்த பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் 17.03 kmpl மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் 18.76 kmpl மைலேஜையும் தரவல்லது. கடந்த 2016ல் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா மாடல் இப்போதும் 4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

இருப்பினும் மாருதி பிரெஸ்ஸா காருக்கு கடுமையான போட்டியினை அளிக்கும் மாடல்கள் இந்த பிரிவில் ஏராளம் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றாக ஹூண்டாய் வென்யூ பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த பிரிவில் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்துவந்த பிரெஸ்ஸா மாடல், வென்யூவின் அறிமுகத்திற்கு பிறகு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ரூ.11,000ல் துவங்கவிருக்கும் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் காருக்கான முன்பதிவு..!

இதுவரை மொத்தம் 5 லட்சம் பிரெஸ்ஸா மாடல்கள் மாருதியின் ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை 4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் கடந்துள்ள முதல் வாகனம் மாருதி சுசுகி பிரெஸ்ஸா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் சந்தைக்கு வரவுள்ள இதன் பிஎஸ்6 பெட்ரோல் வெர்சன் காரின் விற்பனைக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது.

Source: Rushlane

Most Read Articles
English summary
Maruti Brezza petrol bookings at Rs 11k – Variants, Colours, Waiting period
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X