Just In
- 13 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'மேட் இன் இந்தியா' மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் அறிமுகம்... விலை மிக சவாலாக நிர்ணயம்!
இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 கூபே கார் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விலையும் மிக சவாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க கார்கள் ஏஎம்ஜி என்ற பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சாதாரண வகை சொகுசு கார்களில் அதிசெயல்திறன் மிக்க எஞ்சின், விசேஷ சஸ்பென்ஷன் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இந்த கார்கள் வருவதால் தனித்துவமான தோற்றத்தையும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் வாடிக்கையாளரகளை கவர்ந்து வருகின்றன.

இதுவரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார்கள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மிக சரியான விலையில் கொடுப்பதற்காக, ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகளை துவங்கி இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

அந்த வகையில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டின் முதல் கார் மாடலாக ஜிஎல்சி 43 கூபே கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி துவங்கப்பட்டு இருப்பதால், எதிர்பார்த்தபடியே, இந்த காரின் விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆம். புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி 43 கூபே காருக்கு ரூ.76.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, பழைய பிஎஸ்-4 மாடலின் விலைக்கு மிக நெருக்கமாகவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே இறக்குமதி செய்தால் ஒரு கோடி ரூபாயை நெருக்கி விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருந்திருக்கும். ஆனால், இந்தியர்களுக்கு அதிக மதிப்பை கொடுக்கும் விலையில் வந்திருப்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.
இந்த புதிய மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிலும் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் டெலிவிரிப் பணிகளும் துவங்கப்பட உள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரில் முன்பக்கத்தில் மிக பிரம்மாண்டமான பான் அமெரிக்கானா என்ற பாம்பரிய க்ரில் அமைப்பு தக்க வைக்கப்பட்டுளளது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மிரட்டலான பம்பர் அமைப்பு, ஸ்கஃப் பிளேட் அமைப்புடன் முக மிரட்டலாக உள்ளது. அதாவது, வழக்கம்போல் ஏஎம்ஜி கார்களுக்கு உரிய தனித்துவங்களுடன் அசத்துகிறது.

இந்த கார் கூபே வகையில் இருப்பதால், பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்பு, 20 அங்குல ஏஎம்ஜி அலாய் வீல்கள் (ஆப்ஷனலாக 21 அங்குல அலாய் வீல்கள்), கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், எல்இடி டெயில் லைட்டுள், நான்கு குழல்கள் கொண்ட புகைப்போக்கி அமைப்பு, பூட் ஸ்பாய்லர், ரியர் டிஃபியூசர் ஆகியவற்றுடன் மிக வசீகரமாக உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரில் விசேஷமான ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல், பிரஷ்டு அலுமினியத்தாலான பேடில் ஷிஃப்டர்கள், பியானோ பிளாக் சென்டர் கன்சோல், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் செயலி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
இந்த காரில் மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவிங் மோடுகள், வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, மெமரி வசதியுடன் கூடிய இருக்கைகள் என இந்த பட்டியல் நீள்கிறது. ஆக்டிவ் பிரேக்கிங் அசிஸ்ட், 7 ஏர்பேக்குகள், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் ஆகியவையும் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 390 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.