மெர்சலாக்கும் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் அறிமுகம்!

சொகுசு கார் பிரியர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த, புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்திய சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியானது வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பத்தில் மூன்றாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டது. இந்த புதிய மாடல் இன்று இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மோடுலர் ஹை ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட பரிமாணத்தில் பெரிதாகவும் மாறி இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியானது 5,207 மிமீ நீளமும், 1,999 மிமீ அகலமும், 1,823 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இந்த கார் 3,135 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இதனால், இடவசதி மிகச் சிறப்பானதாக மாறி இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய மாடலில் டிசைன் மாறுதல்கள் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. 21 அங்குல அலாய் வீல்களுடன் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டத்தையும் பெற்றிருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டேஷ்போர்டு நவீன யுகத்திற்கு மாறி இருக்கிறது. குரல் வழி மற்றும் கை அசைவுகள் மூலமாக கட்டுப்படுத்தும் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 5 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பின் வரிசை பயணிகளுக்கு சிறிய டிவி திரைகளுடன் மிக சொகுசான மாடலாக இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் பெட்ரோல் (GLS 450) மற்றும் டீசல் எஞ்சின் (GLS 400d) ஆகிய இரண்டு மாடல்கள் கிடைக்கின்றன. பெட்ரோல் மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் எஞ்சின் உள்ளது. அதனுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். EQ பூஸ்ட் என்ற மோடில் வைத்து இயக்கும்போது கூடுதலாக 21 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனும் கிடைக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியின் டீசல் மாடலில் 2.9 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 362 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த எஞ்சின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு ரூ.99.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி மிகச் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும் முன்னணி மாடலாக உள்ளது. இதுவரை 6,700 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has launched the all-new (2020) GLS SUV in the Indian market. The new Mercedes-Benz GLS is available in two variants, both of which are priced at Rs 99.90 lakh, ex-showroom (India).
Story first published: Wednesday, June 17, 2020, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X