புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்ப்டடு இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

6 சீட்டர் மாடல்

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், அதன் 6 சீட்டர் வெர்ஷனாக ஹெக்டர் ப்ளஸ் வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் இந்த மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதாவது, நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் 7 சீட்டர் மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

வேரியண்ட் விபரம்

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் பெட்ரோல் வேரியண்ட் ஷார்ப் மற்றும் ஸ்மார்ட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஹைப்ரிட் பெட்ரோல் வேரியண்ட்டானது ஷார்ப் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். டீசல் மாடலானது சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

வடிவமைப்பு மாற்றங்கள்

ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பம்பர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்துடன் ஹெக்டர் எஸ்யூவியைவிட 65 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 2,750 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டுள்ளது. இதனால், மூன்று வரிசை இருக்கைகள் போதுமான இடவசதியுடன் இடம்பெற்றுள்ளது. 4 பெரியவர்கள், 2 சிறியவர்கள் செல்ல வசதியாக இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

பெட்ரோல் மாடல்

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியிலும் உள்ளன. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 48V மைல்டு ஹைப்ரிட் மாடலிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

டீசல் மாடல்

இதன் டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

உட்புற அம்சங்கள்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் முக்கிய அம்சமாக நேரடி இணைய வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இந்த இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடியதாக மிக பிரம்மாண்டமாக டேஷ்போர்டில் அமைந்துள்ளது. இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வாய்ஸ் கன்ட்ரோல் வசதி மூலமாக கட்டுப்படுத்தும் பனோரமிக் சன்ரூஃப்ட் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

பாதுகாப்பு அம்சங்கள்

விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

விலை விபரம்

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.13.49 லட்சம் முதல் ரூ.18.21 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிக்கு ரூ.14.44 லட்சம் முதல் ரூ.18.54 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

விலை வித்தியாசம்

இதனை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்தே விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக ஏற்கனவே எம்ஜி குறிப்பிட்டது. அதன்படி பார்க்கும்போது, பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2 லட்சம் வரை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டின் விலை ரூ.4 லட்சத்திற்கு மேல் விலை குறைவாக இருக்கிறது. மேலும், இது அறிமுகச் சலுகை விலையாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 13ந் தேதி வரை புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இதே விலையில் கொடுக்கப்படும். அதன் பிறகு விலை ரூ.50,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

வாரண்டி

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிக்கு 5 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளில் வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படும். மேலும், BuyBack திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட ஆண்டுகளில் காரை எம்ஜி மோட்டாரிடமே விற்பனை செய்தால் குறிப்பிடத்தக்க ரீசேல் மதிப்பை பெற முடியும். அதற்கு நிபந்தனைகள் உண்டு.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

முன்பதிவு

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேரி ஸ்கை புளூ, ஸ்டேரி பிளாக், க்ளேஸ் ரெட், பர்கண்டி ரெட், அரோரா சில்வர் மற்றும் கேண்டி ஒயிட் ஆகிய 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Much awaited MG Hector Plus 6 seater SUV has launched in India and prices starting at Rs.13.49 lakh (Ex-showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X