புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் காம்பேக்ட் ரக சொகுசு கார்கள் மூலமாக உலக அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது மினி கார் நிறுவனம். இந்தியாவிலும் மினி கார்களுக்கு சினிமா நட்சத்திரங்கள், பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் இந்த காரை விரும்பி வாங்குகின்றனர்.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த நிலையில், இளம் தலைமுறை எதிர்பார்க்கும் அம்சங்களுடன் அவ்வப்போது மினி கார்கள் மேம்படுத்தப்பட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் 2020 மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் மாடலானது விலை குறைவான தேர்வாக மூன்வாக் என்ற வண்ணக் கலவையில் வந்துள்ளது. இந்த மாடலுக்கு ரூ.41.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

பிரிட்டிஷ் க்ரீன், சில்லி ரெட், மெல்ட்டிங் சில்வர், மிட்நைட் பிளாக், பெப்பர் ஒயிட், ஸ்டார்லைட் புளூ, தண்டர் க்ரே மர்றும் ஒயிட் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளுக்கு ரூ.63,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

இதுதவிர்த்து, புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் காரில் எனிக்மேட்டிக் பிளாக் என்ற வண்ணத் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த வண்ணத் தேர்வுக்கு ரூ.1.30 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 43.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். லிட்டருக்கு 13.79 கிமீ மைலேஜ் வவங்கும்.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் காரில் முன்புறத்திற்கான ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், க்ராஷ் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரன்ப்ளாட் இண்டிகேட்டர், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் காரில் சாம்பல் மற்றும் கருப்பு என இரண்டு இண்டீரியர் வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், ரியர் பனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.

 புதிய மினி க்ளப்மேன் கூப்பர் எஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் மினி கார்களுக்கு உரிய விசேஷ டேஷ்போர்டு அமைப்பு, உயர்தர மிதியடிகள், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், ஸ்டோரேஜ் அறைகள் என பல சிறப்பம்சங்களுடன் சொகுசு கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்கிறது. இந்த காருக்கு வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
New Mini Clubman Cooper S Launched in India and priced at Rs.41.90 lakh (Ex-showroom).
Story first published: Saturday, September 26, 2020, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X