தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்! ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்!

பிரதமர் மோடி செய்த செம்ம மூவ் ஒன்று தற்போது அனைத்து மாநிலங்களிலும் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நன்றாகவே அந்த மூவ் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து நாடு முழுவதும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

முக்கியமாக, சாலை போக்குவரத்து மற்றும் வாகனங்கள் சார்ந்த விவகாரத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகின்றது. இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லா நாடாக மாற்றும் நோக்கில் புதிய சீர்திருத்தங்களை செய்து வருவதாக அத்துறையின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இதன்படி கொண்டுவரப்பட்ட புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது. இருப்பினம், எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் என எதையும் பாராமல், அனைத்தையும் புறம் தள்ளி மோடி தலமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு அந்த சட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இந்த புதிய சட்டத்தில் முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை மிக கடுமையாக வசூலிக்கின்ற வகையில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இதனால், முன்னதாக இருந்த அபராதங்களைக் காட்டிலும் தற்போது விதிக்கப்படும் அபராதங்கள் பத்து மடங்கு உயர்ந்திருக்கின்றது. உதாரணமாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் ரூ. 100 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய மோட்டார் வாகனச்சட்டத்தில் அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த புதிதில் வாகன ஓட்டிகள் பலரின் வயிற்றில் புளியையே கரைக்க ஆரம்பித்தது. இதைவிட, போலீஸார்கள் போக்குவரத்து விதிமீறல்வாதிகளுக்கு வழங்கிய உச்சபட்ச அபராதம், பலருக்கு மாரடைப்பையே ஏற்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக, சில வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக வழங்கப்பட்ட அபராதத் தொகை, அவர்களின் வாகனத்தை விட மிக விலையுயர்ந்தவையாக இருந்தது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இதனால், ஒரு சிலர் தங்களது சொந்த வாகனங்களை ஒதுக்கிவிட்டு, வாடகை வாகனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த சம்பவங்கள்கூட பல மாநிலங்களில் அரங்கேறின. மேலும், உச்சபட்ச அபராதத்தைப் பெற்ற வாகன ஓட்டிகள் சிலர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் போன்ற சில விரும்பதகாத செயல்களும் நிகழ்ந்தன.

இவ்வாறு, புதிய மோட்டார் வாகன சட்டம்குறித்து ஆரம்பத்தில் பல்வேறு முரண்பாடான கருத்துகளும், சம்பவங்களும் தொடர்கதையாகி வந்தது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இந்நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் நாட்டில் அரங்கேறி வந்த போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றது. தொடர்ந்து, விபத்து மற்றும் விபத்தால் உயிரிழிப்போரின் எண்ணிக்கையும் சற்றே குறைந்திருப்பதாக அந்த தகவல் கூறுகின்றது. இதுகுறித்த தகவலை ஈடி ஆட்டோ என்கிற தளம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

அது வெளியிட்டுள்ள தகவலின்படி, "கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் விபத்தின் காரணமாக 1.49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனை 2018ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 1,600 எண்ணிக்கை குறைவு" என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இதைத்தொடர்ந்து, பல்வேறு தகவல்களும் அதில் கூறப்பட்டிருக்கின்றன. முன்னதாக அதிக விபத்துகளைச் சந்தித்து முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் மாநிலம் தற்போது பின் தங்கியிருக்கின்றது. மேலும், இம்முறை 22,655 பேரை விபத்தில் இழந்து முதல் இடத்தை உத்தரபிரதேசம் மாநிலம் பிடித்திருக்கின்றது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

உபி மாநிலத்தின் இந்த விபத்து விகிதம் முன்பைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று ஒடிசா, பிஹார், சத்திஷ்கர் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் அதிகளவிலான விபத்து உயிரிழப்புகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்த தகவல்கள் அனைத்தும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் வழங்கிய விபத்துகுறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

ஒவ்வொரு வருடமும் நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்கள் முதல் அனைத்து மாநிலங்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரங்கேறும் விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த அதிகாரிகள் அடங்கிய சாலை பாதுகாப்பு குழுவிடம் சமர்பிப்பது வழக்கம். இந்த தகவலை ஒப்பிட்டே இந்த புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

தற்போதைய புதிய தகவலின்படி, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக விபத்து உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. இருப்பினும், இது கடந்தாண்டுகளைக் கணிசமான எண்ணிக்கைக் குறைவாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெல்லியில் 227 குறைவான இறப்புகள் 2019ம் ஆண்டில் பதிவாகியிருக்கின்றது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இதேபோன்று, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் 696 குறைவான இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து, கர்நாடகாவில் 673 குறைவான சாலை இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து உத்தரகண்டில் 181 இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இதேபோல, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 10,317 பேர் 2019ம் ஆண்டில் விபத்தில் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகக் குறைவு. அதேசமயம், இது மற்ற மாநிலங்களின் உயிரிழப்புகளைக் காட்டிலும் மிக குறைவான இறப்பு விகிதம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதிபலித்த மோடியின் செம்ம மூவ்.. ஒட்டுமொத்த தாய்மார்களின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்..!

இந்த அதிரடி மாற்றம் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டமே முக்கிய காரணம் கூறப்படுகின்றது. அபராதம் கடுமையாக அதிகரித்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வருவதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New MV Act Reflects In Road Accident Deaths. Read In Tamil.
Story first published: Thursday, March 12, 2020, 12:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X