Just In
- 25 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020 ரேஞ்ச் ரோவர் இவோக் மாடலின் இந்திய அறிமுக தேதி வெளியானது...
லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் இவோக் எஸ்யூவி மாடலின் இரண்டாம் தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது. இதனால் இந்த கார் வருகிற 30ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் தனது விற்பனையை துவங்கவுள்ளது.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான லேண்ட் ரோவர், இவோக் மாடலின் முதல் தலைமுறை காரை கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் இரண்டாம் தலைமுறை கார் வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு இந்திய மார்க்கெட்டில் களம் காணவுள்ளது.

தற்போதைய இவோக் மாடலுடன் ஒப்பிடும்போது இந்த 2020 இவோக் கார் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டிசைனை பெற்றுள்ளது. இதனால் புதிய வடிவில் முன்புற பக்கத்தை கொண்டுள்ள இந்த கார், அப்ட்டேட்டான பக்கவாட்டு மற்றும் பின்புறங்களை பெற்றுள்ளது.

காரின் உட்புற கேபினும் உயர்ரக கார்களுக்கே உண்டான தோற்றத்தில் உள்ளது. இவோக்கின் இந்த இரண்டாம் தலைமுறை காருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த புதிய டிசைன் அமைப்பு அனைத்தும் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் அளவில் பெரிய மாடலான வேலர் எம்யூவியில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இந்த புதிய 2020 எஸ்யூவி காரில் பார்த்தவுடன் கவனிக்கத்தக்க மாற்றங்களாக, புதிய ஹெட்லேம்ப் டிசைன், முன்புற க்ரில், பாப்-அவுட் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் பின்புற டெயில்லைட் போன்றவை உள்ளன. இவ்வாறு அதிகளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் மொத்தமாக பார்க்கும்பொழுது, தற்போதைய மாடலை போல தான் இந்த புதிய கார் காட்சியளிக்கிறது.

அதேபோல் ரூஃப்லைன் மற்றும் பெல்ட்லைன் போன்றவை முந்தைய மாடலில் இருந்து எந்த மாற்றத்தையும் பெறவில்லை. உட்புறத்தில் இந்த 2020 மாடல், இவோக்கின் முதல் தலைமுறை காரை விட ஏகப்பட்ட நவீன ,தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளது.

ப்ரீமியம் தோற்றத்திற்காக லெதர் துணியால் மூடப்பட்ட கேபின், முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட்டிற்காக ஒன்று, கிளைமேட் கண்ட்ரோலிற்காக ஒன்று என இரட்டை தொடுத்திரை உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமில்லாமல் ரேஞ்ச் ரோவரின் இந்த 2020 கார் ஸ்டெரிங் சக்கரத்தில் சில கண்ட்ரோல்களுடன் அறிமுகமாகவுள்ளது. மேலும் பிஸ்டல்-க்ரிப் கியர் லிவர், மின்சாரம் மூலமாக சரி செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், பனோராமிக் சன்ரூஃப் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

புதிய 2020 இவோக் மாடல் பிஎஸ்6 தரத்தில் தற்போதைய தலைமுறை கார் கொண்டுள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை தான் பெற்றுள்ளது. இந்த வகையில் வழங்கப்பட்டுள்ள நான்கு சிலிண்டர் அமைப்புகளை 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 250 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 180 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்துகின்றன. இரு என்ஜின் தேர்வுகளுடனும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியது இவோக் மாடலின் இந்த இரண்டாம் தலைமுறை காருக்கு பெரும்பான்மையான டிசைன் மாற்றங்களை ரேஞ்ச் ரோவர் நிறுவனம் வேலர் மாடலில் இருந்து தான் அப்படியே கொடுத்துள்ளது. இந்த வேலர் எம்யூவி மாடல் மிகவும் அழகான கார் ஆப் தி இயர் என்ற விருதை கடந்த வருடத்தில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவோக்கின் இரண்டாம் தலைமுறை கார் அறிமுகத்திற்கு பிறகு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி, வோல்வோ எக்சி60, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் ஆடி க்யூ5 போன்ற மாடல்களுடன் இந்திய சந்தையில் போட்டியிடவுள்ளது.