ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

ரெனால்ட் நிறுவனம் க்விட் காரின் புதிய நியோடெக் எடிசனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எடிசன் காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

ரெனால்ட் க்விட் நியோடெக் வருகிற பண்டிக்கை காலத்திற்கான லிமிடேட் எடிசன் ஆகும். க்விட் ஹேட்ச்பேக் காருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் விதத்தில் ரெனால்ட் நிறுவனம் இந்த லிமிடேட் எடிசன் காரை கொண்டுவந்துள்ளது.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

மேலும் வரப்போகும் தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை காலங்களை மனதில் வைத்து கொண்டு தயாரிப்புகளின் விலைகளையும் இந்நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த வகையில் க்விட் மாடலின் ரேஞ்சின் விலை ரூ.8 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது ஆரம்ப விலையே ரூ.3 லட்சத்தில் உள்ளது.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிவிட் நியோடெக் எடிசனின் ஆரம்ப விலை ரூ.4.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக இந்த எடிசனை ரூ.4.84 லட்சம் என்ற விலையிலும் பெறலாம். இந்த விலையில் க்விட்டின் ஆர்எக்ஸ்எல் ட்ரிம் கிடைக்கும்.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

நியோடெக் எடிசனிற்கு மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 800சிசி, 1.0 லிட்டர் மேனுவல், 1.0 லிட்டர் ஏஎம்டி உள்ளிட்டவை அடங்குகின்றன. இன்றையில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டன. டெலிவிரிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

ஜான்ஸ்கர் நீல நிற மேற்கூரையுடன் சில்வர் மற்றும் சில்வர் நிற மேற்கூரையுடன் ஜான்ஸ்கர் என்ற இரு விதமான நிறத்தேர்வுகள் க்விட்டின் இந்த லிமிடேட் எடிசன் காருக்கு வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ரூ.30,000 வரையில் இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதே என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் க்விட்டின் பிரிவில் வேறெந்த ஹேட்ச்பேக் காரும் கிடைப்பதில்லை.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

இதுமட்டுமின்றி நியோடெக் கதவு க்ளாடிங், B-பில்லருக்கு கருப்பு நிற டேப்பிங், இருக்கைகள் மற்றும் ஃபாப்ரிக்கில் நீல நிற உள்ளீடுகள், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் சாக்கெட், ஃப்ளெக்ஸ் சக்கரங்கள் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8.0 இன்ச்சில் தொடுத்திரை உள்ளிட்டவையும் புதிய நியோடெக் எடிசன் காரில் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...

க்ரோம் பிரியர்களுக்காக முன்பக்க க்ரில் அமைப்பில் கூடுதலாக க்ரோமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஓட்டுனருக்கு காற்றுப்பை, இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவைகளை ஆரம்பத்தில் இருந்தே க்விட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் ரெனால்ட் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Neotech Edition Launched
Story first published: Thursday, October 1, 2020, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X