700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலின் ரேஞ்ச் அசரடிக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ஆக்டேவியா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு அதிக மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்த சூழலில், வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

இந்த நிலையில், புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் வழங்கப்பட உள்ளது. குறைவான மாசு உமிழ்வையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், எரிபொருள் செலவை வெகுவாக குறைக்கும் விதத்தில் இந்த புதிய மாடலை ஸ்கோடா வெளியிட்டுள்ளது.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

ஸ்கோடா ஆக்டேவியா ஜி- டெக் (G-Tec) என்ற பெயரில் இந்த புதிய மாடல் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினை சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என தனித்தனியாக இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

மேலும், இந்த காரில் மூன்று சிஎன்ஜி எரிபொருள் டேங்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 17.33 கிலோ சிஎன்ஜி எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். தவிரவும், 9 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் மட்டும் 500 கிமீ தூரம் வரையிலும், பெட்ரோலில் மட்டும் 190 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும். மொத்தமாக 690 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

பெட்ரோல், சிஎன்ஜி எரிபொருள் என இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறிய சாதனம் கட்டுப்படுத்தும். ஓட்டுனர் மேனுவலாக தேர்வு செய்ய தேவையில்லை. காரின் இயக்கம், வெளிப்புற வெப்ப நிலை உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் எரிபொருள் தேர்வை இந்த சாதனம் தேர்வு செய்யும். உதாரணத்திற்கு வெளியில் வெப்ப நிலை 10 டிகிரிக்கும் கீழே சென்றால், பெட்ரோலில் இயங்கும். அதேபோன்று, எரிவாயு அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு கீழே சென்றாலும், பெட்ரோலில் இயங்கும்.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

பொதுவாக கார்களில் சிஎன்ஜி எரிபொருள் கலன்கள் பூட்ரூம் பகுதியில் அமைக்கப்படும். ஆனால், இந்த காரில் 455 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்கள் வெளியூர் பயணங்களின்போது சிறந்ததாக அமையும்.

 700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு!

அடுத்த ஆண்டு இந்தியா வர இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் இந்தியாவுக்கு பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிஎன்ஜி எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கும்போது இந்த காருக்கான சந்தை வாய்ப்பு மிக பிரகாசமாக அமையும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has revealed Octavia G-TEC CNG model in Europe.
Story first published: Saturday, June 27, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X