ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

2020 இறுதியில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள ஆக்டேவியா ஆர்எஸ் மாடலில் ஹைப்ரீட் என்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹைப்ரீட் என்ஜினை பெறும் முதல் ஆர்எஸ் மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா கார் விளங்கவுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

இந்த ஹைப்ரீட் என்ஜினின் ஆற்றல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகமாகவுள்ள 2020 கோல்ஃப் ஜிடிஇ மாடலுடன் ஒத்து காணப்படுகிறது. இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பில் 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின், 115 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

இதனால் ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் இந்த ஹைப்ரீட் என்ஜின் மூலமாக 245 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு தேவையான இயக்க ஆற்றலை பெற முடியும். இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் 13 kWh பேட்டரி பொருத்தப்படவுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

இந்த பேட்டரி, ஆர்எஸ்245 மாடலின் பேட்டரியுடன் ஒப்பிடும்போது சற்று செயல்திறன் குறைவு தான். இதனால் ஆர்எஸ் மாடலின் இந்த ஹைப்ரீட் வேரியண்ட் (ஐவி) கார் 0-லிருந்து 100 kmph என்ற வேகத்தை ஆர்எஸ்245 மாடலை விட 0.7 வினாடிகள் தாமதமாக 7.3 வினாடிகளில் தான் அடையும்.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

இதேபோல் ஆக்டேவியா ஆர்எஸ்-ன் இந்த ஹைப்ரீட் வேரியண்ட் அதிகப்பட்ச 225 kmph என்ற வேகம் வரையில் இயங்கும். இந்த வேகம் ஆர்எஸ்245 மாடலின் அதிகப்பட்ச வேகத்தை விட 25 kmph குறைவு. இவ்வாறு ஆர்எஸ்245 மாடலை விட என்ஜினின் தரத்தில் இந்த ஹைப்ரீட் கார் பின்தங்கி இருந்தாலும், ஆர்எஸ் ஹைப்ரீட் கார் வெறும் எலக்ட்ரிக் ஆற்றலில் மட்டும் சுமார் 60 கிமீ வரை இயங்கக்கூடியது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

இந்த ஒரு விஷயமே ஆக்டேவியா ஆர்எஸ் ஹைப்ரீட் வேரியண்ட்டிற்கு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து தரும் என கூறப்படுகிறது. இத்தகைய அம்சங்களுடன் கிஸ்மோஸ்களையும் ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் இந்த புதிய ஹைப்ரீட் வேரியண்ட் கார் பெற்றுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

இந்த காரில் உள்ள அப்டேட்டான ஸ்டேரிங் சக்கரம் வளைவுகளில் நேர்த்தியாகவும், விரைவாகவும் செயல்பட உதவும். அதேபோல் ஆர்எஸ் ஹைப்ரீட் மாடலில் உள்ள ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு, வேகமான பயணத்திற்கு பின்பு, கார் இன்னும் விரைப்பான நிலையில் உள்ளதா என்பதை அறிந்து செயல்படும்.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

டிசைன் பாகங்களை பொறுத்த வரையில், ஆக்டேவியா ஆர்எஸ் ஐவி வேரியண்ட் ஏகப்பட்ட ஸ்போர்ட்டியான பாகங்களை பெற்றுள்ளது. முன்புறத்தில் உள்ள க்ரோம், பளப்பளப்பான க்ரில் மற்றும் எதிர்வரும் காற்றுக்கு இணையாக உள்ள விண்டோலைன் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

முன்புற பம்பர், முரட்டுத்தனமான ஏர்டேம் மற்றும் பிளவுப்பட்ட எல்இடி ஃபாக் விளக்குகளுடன் காணப்படுகிறது. இந்த ஹைப்ரீட் வேரியண்ட்டின் மிக முக்கியமான அடையாளமாக இதன் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவை தான் ஓட்டுனருக்கு மிகவும் குறைவான உயரத்தில் மிதப்பது போன்ற உணர்வை வழங்கவுள்ளன.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

முந்தைய மாடலில் இருந்து அப்டேட்களை அதிகளவில் பெற்ற பாகமாக கருப்பு ஸ்ப்ளிட்டர் மற்றும் ட்யூல் எக்ஸாஸ்ட் உடன் உள்ள பின்புற பம்பர் விளங்குகிறது. காரின் உட்புறத்தில் கருப்பு நிற டேஸ்போர்டை ஆக்டேவியா ஆர்எஸ் ஐவி மாடல் கொண்டுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

அல்கண்டாரா ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த டேஸ்போர்டில் நிறைய இடங்களில் சிவப்பு நிறம் எட்டி பார்க்கிறது. இதனுடன் ஆர்எஸ் மாடலுக்கே உண்டான காக்பிட் மற்றும் இன்போடெயின்மெண்ட் பயனாளர் தகவல்கள் வசதிகளையும் இந்த புதிய ஹைப்ரீட் வேரியண்ட் கார் பெற்றுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் இந்த ஹைப்ரீட் வேரியண்ட் ஐரோப்பிய மார்க்கெட்டில் மிக விரைவில் விற்பனையை துவங்கவுள்ளது. ஆக்டேவியா மாடலுக்கு இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் 2020 ஆக்டேவியா மாடலை போன்று இந்த ஆக்டேவியா ஆர்எஸ் ஐவி மாடலிலும் ஏகப்பட்ட வசதிகளை ஸ்கோடா இந்தியா நிறுவனம் வழங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2020 Skoda Octavia RS iV
Story first published: Tuesday, March 3, 2020, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X