மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

முதன்முறையாக புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எந்தவொரு மறைப்பும் இன்றி இந்தியாவில் சோதனையின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா செடான் காரின் நான்காம் தலைமுறையை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உலகளவில் அறிமுகம் செய்தது. அதேநேரம் இந்தியாவில் டி-செடான் பிரிவில் மூன்றாம் தலைமுறை ஆக்டேவியா காரை விற்பனை செய்வதையும் இந்நிறுவனம் நிறுத்தவில்லை.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

இந்த 2020ஆம் ஆண்டு துவக்கம் வரையில் விற்பனையில் இருந்த ஆக்டேவியா, பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்படாத காரணத்தினால் நிறுத்தி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் புதிய தோற்றத்தில் ஆக்டேவியாவை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

இதனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஆக்டேவியா அதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை முதன்முறையாக எந்தவொரு மறைப்பும் இல்லாமல் இந்த செடான் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

இது தொடர்பாக டிவிட்டரில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் மூலம் முந்தைய தலைமுறை ஆக்டேவியாவை காட்டிலும் இந்த புதிய தலைமுறை பெரிய அளவில் தோற்றத்தில் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதை அறிய முடிகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

குறிப்பாக இரு-துண்டுகளாக வழங்கப்பட்டு வந்த ஹெட்லேம்ப் அமைப்பு இந்த சோதனை காரில் ஒரே-துண்டாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் முன்பு இருந்ததை விட பெரியதாக காட்சியளிக்கிறது. இவற்றுடன் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களையும் நான்காம் தலைமுறை ஆக்டேவியா கார் பெற்றுள்ளது.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

எல்இடி டெயிலைட்களுடன் உள்ள காரின் பின்பக்கத்தில் ஸ்கோடா முத்திரைக்கு மாற்றாக ‘SKODA' என்ற முத்திரை பின் கதவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் தான் ஸ்கோடா கரோக்கிலும் பொருத்தப்படுகின்றது. அதேநேரம் புதிய ஆக்டேவியா டாப் வேரியண்ட்கள் கூடுதலாக 190 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடிய 2.0 லிட்டர் என்ஜின் தேர்வையும் பெறலாம்.

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றப்படி டீசல் என்ஜின் தேர்வை இந்த செடான் கார் பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஸ்கோடா ஆக்டேவியாவிற்கு நேரடி போட்டி மாடல்களாக ஹூண்டாய் எலண்ட்ரா, ஹோண்டா சிவிக் உள்ளிட்டவை விளங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Upcoming Next-Gen Skoda Octavia Spied Testing Undisguised In India
Story first published: Tuesday, October 20, 2020, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X