அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்

 அதிக மதிப்பை வழங்கும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட்டின் விபரம், அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள், விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

அண்மையில் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் நீக்கப்பட்டு, புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டது. ரைடர், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்பட்டது.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

குறிப்பாக, ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் ரைடர் பேஸ் வேரியண்ட் ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸ் வேரியண்ட் என்றாலே, ஒன்றுமில்லை என்று கூற முடியாத அளவுக்கு வசதிகளும் போதுமான அளவுக்கு கொடுக்கப்பட்டது.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பேஸ் வேரியண்ட்டிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வேரியண்ட்டிற்கு கிடைத்த வரவேற்பு எகிறியதால், முன்பதிவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த சூழலில், ரைடர் வேரியண்ட்டைவிட அதிக வசதிகளுடன் ரைடர் ப்ளஸ் என்ற புதிய வேரியண்ட் ஸ்கோடா ரேபிட் காரில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் ரைடர் வேரியண்ட்டில் இரண்டு வண்ணத் தேர்வுகள் மட்டுமே கொடுக்கப்படும் நிலையில், ரைடர் ப்ளஸ் வேரிண்ட்டில் கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் டாஃபி பிரவுன் ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

விசேஷ கருப்பு வண்ண முன்புற க்ரில் அமைப்பு, அலங்கார ஸ்டிக்கர்கள், கருப்பு வண்ண பி பில்லர், ஜன்னல்களை சுற்றி க்ரோம் பீடிங் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த வேரியண்ட்டில் 6.5 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்வதுடன், ஸ்மார்ட் லிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியும் உள்ளது.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மேலும், இந்த வேரியண்ட்டில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹெட்ரெஸ்ட், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளன.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. வரும் செப்டம்பரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ரைடர் ப்ளஸ் வேரியண்ட் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதுடன், அதிக மதிப்பை வழங்கும். இதனால், ரைடர் வேரியண்ட்டிற்கு கிடைத்தது போலவே, இந்த வேரியண்ட்டிற்கும் அதிக வரவேற்பு இருக்கும் என்று ஸ்கோடா கருதுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has added a new variant to the recently launched Rapid 1.0-litre TSI sedan in the Indian market, called the Rider Plus. The new Skoda Rapid 'Rider Plus' variant is positioned just above the base-spec 'Rider' trim in the sedan's lineup and is priced at Rs 7.99 lakh, ex-showroom (Delhi).
Story first published: Wednesday, July 15, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X