தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள டாடா நெக்ஸான் டிசிடி மாடல் அறிமுகத்திற்கு முன்பாக சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இதன் ஸ்பை படங்களின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

டாடா நெக்ஸானின் புதிய டிசிடி வெர்சன் இதற்கு முன்பும் கடந்த மார்ச் மாதத்தில் சோதனையில் உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது புனேவில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த எஸ்யூவி கார் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

இந்த சோதனை ஓட்டம் குறித்து டீம் பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டு செய்தியில் இந்த சோதனை காரில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பை படங்கள் தற்போதைய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்று புதிய நெக்ஸான் டிசிடி மாடலும் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகவுள்ளதை வெளிக்காட்டுகின்றன.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

தற்சமயம் விற்பனையில் உள்ள நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கிவரும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினானது 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

இதன் டீசல் மாடலில் உள்ள என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.95 லட்சத்தில் இருந்து ரூ.12.70 லட்சம் வரையில் உள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி காரின் டிசிடி வெர்சன் இவற்றை காட்டிலும் சற்று ப்ரீமியமான விலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

இதற்கிடையில் இந்நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் மாடலும் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ஹேட்ச்பேக் கார் இந்த சோதனையில் பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் உட்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்

நெக்ஸான் காரில் கொண்டுவரும் டிசிடி ஆனது விரைவான கியர் ஷிஃப்ட் நேரத்தை வழங்குவது மட்டுமில்லாமல், வாகனத்தின் எரிபொருள் திறனையும் அதிகரிக்கும். தற்போதைய மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கும் சந்தையில் வரவேற்பு கிடைத்து வந்தாலும், புதிய நெக்ஸான் டிசிடி வேரியண்ட்டின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Tata Nexon DCT continues testing
Story first published: Thursday, July 2, 2020, 1:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X