டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புக்கிங்கும் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள டொயோட்டா டீலர்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

இந்தியாவின் எம்பிவி ரக கார் ரகத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தன்னிகரற்ற கார் மாடலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மற்றும் டூரிங் ஸ்போர்ட் ஆகிய மாடல்களின் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிஎஸ்-6 மாடல்களுக்கான விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல்களுக்கு ரூ.15.36 லட்சம் முதல் ரூ.24.06 லட்சம் வரையில் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

பெட்ரோல் மாடலின் விலை ரூ.23,000 வரையிலும், டீசல் மாடல்களின் விலை ரூ.1.43 லட்சம் வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

எனினும், இது அறிமுகச் சலுகை விலையாகவும், முதலில் முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விலை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, விரைவில் மீண்டும் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா 2.7 லிட்டர் பெட்ரோல எஞ்சின், 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 166 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

இதன் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 2.8 லிட்டர் பிஎஸ்-6 மாடல் தேர்வு வழங்கப்படவில்லை.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எமெர்ஜென்ஸி பிரேக் சிக்னல் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிஎஸ்-6 மாடல்களின் டெலிவிரி பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் துவங்கப்பட இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... புக்கிங்கும் துவங்கியது!

அதேநேரத்தில், பிஎஸ்-6 எரிபொருள் வினியோகம் துவங்கப்படும் நகரங்களில் இந்த புதிய பிஎஸ்-6 இன்னோவா க்ரிஸ்ட்டா டெலிவிரி பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Japanese car maker, Toyota Kirloskar Motor (TKM), today, opened bookings for the BS-VI compliant version of its flagship MPV, Innova Crysta. The petrol and diesel variants of the BS-VI compliant Innova Crysta will be available in both Manual as well as Automatic Transmission options.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X