டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடலான டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

கடந்த மார்ச் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து அறிமுகமான டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி மாடலுக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.33.12 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது டீலர்ஷிப்களை சென்றடைந்து வருவதால் இந்த டிகுவான் மாடலின் டெலிவிரி பணிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

இந்த எஸ்யூவி மாடலை சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தி வரும் ஃபோஸ்வேகன் நிறுவனம் வழக்கமான டிகுவான் மாடலை காட்டிலும் இந்த காரின் நீளத்தை சற்று அதிகமாக வடிவமைத்துள்ளது. இதனால் 7 பயணிகள் வரை அமரக்கூடிய இந்த எஸ்யூவி காரின் வீல்பேஸ் அளவு 2,787மிமீ-ல் உள்ளது.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

வெளிப்புறத்தில் எல்இடி பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளுடன் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள இந்த காரின் பின்புறத்தில் உள்ள டெயில்லைட்டும் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

இவற்றுடன் காரில் பனோராமிக் சன்ரூஃப், ஒளியூட்டப்பட்ட ஸ்கஃப் தட்டுகள் மற்றும் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. இதன் டெயில்கேட்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடியவை. இதுமட்டுமின்றி பார்க் அசிஸ்ட் வசதியும் இந்த எஸ்யூவி காரில் உள்ளது.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

2017 மே மாதத்தில் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகமான டிகுவான் மாடலில் ஒரே ஒரு 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மட்டும் தான் வழங்கப்பட்டது. ஆனால் இந்த டீசல் என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதியினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டது.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

இதற்கு பதிலாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4,200 ஆர்பிஎம்-ல் 187 பிஎச்பி பவரையும், 1,500- 4,100 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனையும், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வெளிப்படுத்துகிறது.

டீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...!

ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் விற்பனையை துவங்கவுள்ள டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை காட்டிலும் இதன் 5-இருக்கை வெர்சன் வெறும் ரூ.3-4 லட்சங்கள் மட்டுமே அதிகமாகும். இந்த எஸ்யூவி மாடலுக்கு போட்டியினை தர இந்திய சந்தையில் ஹோண்டா சிஆர்-வி, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடல்கள் தயாராகவுள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen Tiguan Allspace reaches dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X