Just In
- 1 hr ago
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
- 4 hrs ago
இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- 4 hrs ago
கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக்!! ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்
- 19 hrs ago
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
Don't Miss!
- News
கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது
- Movies
மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா?.. ரசிகர்கள் ஷாக்!
- Sports
கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு!
- Lifestyle
பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? உண்மை என்ன?
- Finance
டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?
- Education
12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கின் அடிப்படையில் உருவாகும் புதிய தலைமுறை எம்யு-எக்ஸ்.. 2021ல் அறிமுகம்
புதிய தலைமுறை இசுஸு எம்யு-எக்ஸ் காரின் காப்புரிமை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளாவிய சந்தையில் இசுஸு நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலாக டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இதன் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கத்துடன் புதிய தலைமுறை எம்யு-எக்ஸ் வடிவமைக்கப்பட்டிருப்பது, தற்போது வெளியாகியுள்ள காப்புரிமை படங்களின் மூலமாக தெரிய வருகிறது.

புத்தம் புதிய டி-மேக்ஸ் கடந்த வருடத்தில் இசுஸு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த பிக்அப் ட்ரக்கின் அடிப்படையில்தான் புதிய எம்யு-எக்ஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்தான் இதன் காப்புரிமை படங்கள் இஸுஸு தாயகமான ஜப்பான் நாட்டின் ஆட்டோவீக் செய்திதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன.

மற்றப்படி புதிய தலைமுறை எம்யு-எக்ஸ் காரை பற்றிய வேறெந்த தகவலையும் இசுஸு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. காப்புரிமை படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளதால் இந்த முழு-அளவு எஸ்யூவியின் அறிமுகம் வெகு தூரத்தில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, புதிய எம்யு-எக்ஸ் பெரும்பான்மையான பாகங்களை டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கில் இருந்துதான் பெற்று வரவுள்ளது. இதனால் இந்த புதிய தலைமுறை காரின் தயாரிப்பு செலவு இசுஸு நிறுவனத்திற்கு குறைவாகவே ஆகியிருக்கும்.

காரின் முன்பக்கம், நேர்த்தியான வடிவில் ஹெட்லேம்ப்கள், கடா பற்கள் வடிவிலான ஸ்லாட்களுடன் க்ரில் பகுதி மற்றும் காரின் முனைகளுக்கு தள்ளப்பட்ட புதிய ஃபாக் விளக்கிற்கான குழிகளுடன் ரீ-டிசைனில் பம்பர் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இதில் ஃபாக் விளக்குகள் தான் காரின் முன்பக்க அடிப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
புதிய சறுக்கு தட்டுகள் மற்றும் தாழ்வான இன்லெட் உள்ளிட்டவை விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எம்யு-எக்ஸின் முன்பக்க டிசைனில் கொண்டுவரப்பட்டுள்ள மற்ற அம்சங்களாகும். காரின் பக்கவாட்டு பகுதி பெரிய க்ரீன்ஹௌஸ், கார்னிஷிங் செய்யப்பட்ட ஜன்னல் லைன், நீட்டிக்கப்பட்ட பெல்ட்லைன், உச்சரிக்கப்பட்ட கேரக்டர் லைன்கள் மற்றும் மஸ்குலர் சக்கர வளைவுகளை கொண்டுள்ளது.

இவை தவிர்த்து காரின் இரு பக்கங்களிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. கூர்மையான வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள், புதிய ஃபாக் விளக்கிற்கான குழி போன்றவற்றை கொண்டுள்ள காரின் பின்பக்கம் க்ரோம்-ஆல் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. உட்புற கேபினை பற்றிய எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை.

நமக்கு தெரிந்தவரை வெளிப்புறத்தை போல் உட்புறமும் இசுஸு டி-மேக்ஸை தான் ஒத்திருக்கும். அதேபோல் தகுந்த அப்கிரேட்களுடன் டி-மேக்ஸின் ஏணி-ஃப்ரேம் சேசிஸில் இந்த புதிய தலைமுறை கார் உருவாகுவதால், அதன் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையே இந்த காரும் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் புதிய எம்யு-எக்ஸின் டாப் வேரியண்ட்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகளுடன் 4-சக்கர-ட்ரைவ் உள்ளமைவை பெறலாம். ஏழு-இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவியாக உருவாகும் இரண்டாம் தலைமுறை இசுஸு எம்யு-எக்ஸ் அடுத்த ஆண்டில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

முதலாவதாக இந்த புதிய தலைமுறை இசுஸு கார் தென் ஆசியா நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன் இந்திய வருகை அடுத்த ஆண்டிலும் இருக்காது என்பது போல்தான் தெரிகிறது. ஏனெனில் இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கே இன்னும் இந்தியாவிற்கு வந்து சேரவில்லை.