ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் கியா சொரேண்டோ எஸ்யூவி..!

அடுத்த மாதத்தில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக புதிய சொரேண்டோ மாடலின் சில முக்கிய தகவல்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

ஸ்கோடா கோடியாக் நான்காம் தலைமுறை மாடலுக்கு போட்டியாக சந்தைக்கு வரும் இந்த கியா சொரேண்டோ மாடல் அதன் முந்தைய முன்னோடி கார்கள் மட்டுமில்லாமல் ஐரோப்பாவில் விற்பனையாகும் அனைத்து கியா மாடல் கார்களை விடவும் வித்தியாசமான டிசைனை பெற்றுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

கிட்டத்தட்ட இந்த புதிய கார் கியா டெல்லுரைட் மாடலின் தோற்றத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. நீளம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொரேண்டோ மாடலின் உட்புற கேபின் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

காரின் முன்புறம் சிறியதாகவும், பின்புற பகுதி பெரிய அளவிலும் உள்ளது. இதன் வீல்பேஸ் 35மிமீ ஆகும். காரின் மற்ற பரிமாண அளவுகள் தலா 10மிமீ அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே கூறியதுபோல் காரின் கேபின் அமைப்பு பெரியதாக காட்சியளிக்கிறது.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

குறிப்பாக காரின் நடு வரிசை இருக்கைகளில் அமர்பவர்களுக்கு அதிகளவில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் உலக சந்தையில் அறிமுகமாகவுள்ள கியாவின் இந்த புதிய கார், இங்கிலாந்தில் ஏழு இருக்கை வெர்சனாகவும், மற்ற நாட்டு சந்தைகளில் ஐந்து இருக்கை வெர்சனாகவும் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

கியா நிறுவனத்தில் இருந்து இந்த புதிய மாடலின் ஒரே ஒரு உட்புற கேபினின் புகைப்படம் மட்டும் தான் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் உலக சந்தையில் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்காக அதிகளவில் ட்ரிம் நிற தேர்வுகளை இந்த புதிய கியா கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

உட்புறத்தில் மிக முக்கியமான அம்சமாக பெரிய இன்போடெயின்மெண்ட் தொடுத்திரையையும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இணைக்க மெர்சிடிஸ் கார்களுக்கு இணையாக ஸ்டைலான பேனல்கள் உள்ளன.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

மத்தியில் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ள ஏசியை கட்டுப்படுத்த க்ளைமேட் கண்ட்ரோல் பேனலும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்பங்களில் க்ரூஸ் கண்ட்ரோலை கியா மோட்டார்ஸ் நிறுவனம் மெருகேற்றியுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

இதனால் வளைவுகளில் சாய்வாக திரும்பும்போதும், சுய-பார்க்கிங் செயல்பாடுகளிலும் லிமிட்டை தன்னிச்சையாக இதன் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ரீ-அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இதற்காக கீ ஃபாப் காரில் பொருத்தப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் போது எதன் மீதாவது மோதும் நிலை உருவானால் ஆட்டோமேட்டிக்காக ப்ரேக் செயல்பட்டுவிடும்.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

இவை தவிர்த்து இந்த புதிய கியா மாடலில் வழங்கப்படவுள்ள மானிட்டரிங் சிஸ்டம் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியையும் டேஸ்போர்டு மூலமாக ஓட்டுனருக்கு காண்பிக்க உதவும். இந்த சொரேண்டோ மாடலில் இரு என்ஜின் தேர்வுகளை கியா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

இதில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 202 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 60 பிஎச்பி எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 1.5 kWh பேட்டரி உள்ளிட்டவற்றை கொண்ட இதன் மற்றொரு என்ஜின் தேர்வான ஹைப்ரீட் வேரியண்ட் 230 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.

இவற்றுடன் மிக விரைவில் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் தேர்வும் இணையவுள்ளது. இந்த ஹைப்ரீட் வேரியண்ட் 90 பிஎச்பி ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 16.6 kWh பேட்டரியுடன் 265 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஹைப்ரீட் என்ஜினுடன் மார்க்கெட்டிற்கு வரும் அடுத்த தலைமுறை கியா சொரேண்டோ எஸ்யூவி..!

இதனால் முன்புற மற்றும் ஆல்-வீல் ட்ரைவ் தேர்வுகளில் மட்டுமில்லாமல் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டிலும் வாடிக்கையாளர்கள் புதிய கியா சொரேண்டோ மாடலை சந்தையில் பெறலாம். அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பிறகு வெளியாகவுள்ள இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் 4x4 ட்ரைவிங் ஸ்டைலை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொரேண்டோ மாடல் மட்டுமின்றி மேலும் பல புதிய தயாரிப்பு கார்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டம் கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்திடம் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles
English summary
Next-gen Kia Sorento Revealed Ahead Of Debut At Geneva Motor Show
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X