6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஜூன் மாத துவக்கத்தில் செலிரியோ மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து புதிய தலைமுறை செலிரியோ காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. மாருதியின் இந்த அடுத்த தலைமுறை கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் மைல்ட்டாக அப்டேட் செய்யப்பட்ட இக்னிஸ் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

அடுத்த 2021ஆம் வருடத்திற்காக இந்நிறுவனம் வேகன்ஆர் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை ஒதுக்கி வைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காருடன் அடுத்த வருடத்தில் செலிரியோ மாடலின் புதிய அவதாரமும் வெளியாகலாம்.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

மாருதி நிறுவனம் செலிரியோ மாடலை கடந்த 2014ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தோற்றத்தில் சற்று மாற்றங்களுடன் எக்ஸ் வேரியண்ட்டை பெற்றிருந்த இந்த ஹேட்ச்பேக் மாடல் இந்த கூடுதல் வேரியண்ட்டை தவிர்த்து இந்த 6 வருடங்களில் சிறிய அளவில் கூட வேறெந்த அப்டேட்டையும் பெறவில்லை.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

இதுவே இதன் இரண்டாம் தலைமுறை கார் தயாராகுவதற்கு முக்கிய காரணம். மேலும் தற்போதைய செலிரியோ மாடலுடன் ஒப்பிடும் தோற்றத்தில் பெரிய அளவில் வேறுப்பாட்டை இந்த புதிய தலைமுறை கார் கொண்டிருக்கும்.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

தற்போதைக்கு ஒய்என்சி என்ற குறியீட்டு பெயரால் குறிக்கப்பட்டு வருகின்ற புதிய செலிரியோ மாடல், மாருதியின் எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் வேகன்ஆர் மாடல்களின் எடை குறைவான ஐந்தாம் தலைமுறை ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாராகுவதால் செலிரியோ காரின் வழக்கமான 1.0 லிட்டர் கே10பி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. தற்சமயம் பிஎஸ்6 தரத்தில் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

இதன் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படுகின்றன. முற்றிலும் திருத்தியமைக்கப்பட்ட வெளிப்புற தோற்றத்துடன் புதிய செலிரியோ கார் சில நவீன தொழிற்நுட்பங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...?

இந்த தொழிற்நுட்பங்களில், உயர்தரத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியை கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன. பயணிகளில் பாதுகாப்பிற்கு இரட்டை முன்புற காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை இருக்கும்.

Most Read Articles
English summary
New-Gen Maruti Celerio (YNC) Likely To Be Based On Heartect K Platform (Suzuki A:Wind)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X