செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

மாருதி சுஸுகி நிறுவனம் தற்சமயம் அதன் பிரபல ஹேட்ச்பேக் மாடலான செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய தலைமுறை கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க வகையிலான மாற்றங்களுடன் வெளிவரவுள்ள புதிய செலிரியோவை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

இதற்கிடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை ஆட்டோஎக்ஸ் என்ற செய்திதளம் வெளியிட்டுள்ளது. இவற்றில் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இருப்பினும் காரில் கொண்டுவரப்பட்டுள்ள சில தோற்ற மாறுபாடுகளை நம்மால் அறிய முடிகிறது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

இதன்படி பார்க்கும்போது மொத்த செலிரியோ காரின் அளவும் புதிய தலைமுறைக்காக சற்று பெரியதாக்கப்பட்டுள்ளது. இதனால் க்ராஸ்ஓவர் வடிவத்தில் காட்சியளிக்கும் இந்த சோதனை காரில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் கவனிக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

மேலும் வெளிப்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றுடன் ரீ-டிசைனில் பம்பர்கள் இருபுறங்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றன.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

அதேபோல் உட்புறத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சில கண்ட்ரோல்களுடன் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், க்ளைமேட் கண்ட்ரோல், இரட்டை நிறத்தில் உள்ளமைவு உள்ளிட்டவற்றை பெற்று வரலாம்.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

இவற்றுடன் பல எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர், கேமிராவுடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் புதிய செலிரியோவில் எதிர்பார்க்கலாம்.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

2021 செலிரியோ, பிராண்டின் ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில்தான் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ, இக்னிஸ், வேகன் ஆர், டிசைர், ஸ்விஃப்ட், பலேனோ, எஸ்-க்ராஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 உள்ளிட்ட மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

மேலும் இரண்டாம் தலைமுறை செலிரியோவில் வீல்பேஸும் தற்போதைய செலிரியோவை காட்டிலும் பெரியதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உட்புற கேபினின், குறிப்பாக பின் இருக்கை பயணிகளுக்கு கூடுதல் இடத்தை இந்த 2021 கார் பெற்றுவரும் என கூறப்படுகிறது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இதனால் அதே கே10பி பெட்ரோல் என்ஜினுடன் தான் புதிய செலிரியோவும் விற்பனையை துவங்கும். 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு ஏஎம்டி உள்ளிட்ட கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....

அதேநேரம் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்டையும் சிறப்பான எரிபொருள் திறனிற்காக மாருதி நிறுவனம் புதிய செலிரியோவில் வழங்கவுள்ளது. புதிய செலிரியோவுக்கும் போட்டியினை அளிக்க டாடா டியாகோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்கள் தயாராகவுள்ளன.

Most Read Articles

English summary
Next-Generation Maruti Suzuki Celerio Hatchback Spied Testing Ahead Of Launch In India: Spy Pics. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X