செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான இரண்டாம் தலைமுறை ஐ20 கார் வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த காரில் டிசைன்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் என்ஜின் தேர்வுகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் இதன் அறிமுகம் 2020 செப்டம்பரில் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலில் இந்த ஹேட்ச்பேக் கார் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

ஏற்கனவே கூறியதுபோல் முழுக்க முழுக்க திருத்தியமைக்கப்பட்ட டிசைனை பெற்றுள்ள புதிய ஐ20 மாடலில் க்ரில் உடன் உள்ள முன்புற ஃபேஸியா மற்றும் ஹெட்லேம்ப் உள்ளிட்டவை தற்போதைய தலைமுறை காரை காட்டிலும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

காரின் பின்புறத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள லைட் பார், ரீ-டிசைனில் உள்ள டெயில்லைட்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதால் காருக்கு புதிய தோற்றத்தை தருகிறது. காரின் திருத்தியமைக்கப்பட்ட பக்கவாட்டு பகுதி போல்டான க்ரீஸ் லைன்களால் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

இவை மட்டுமில்லாமல் ஃபங்கியான டிசைனில் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்களையும் புதிய ஐ20 கார் கொண்டுள்ளது. இந்த அலாய் சக்கரங்களின் டிசைன்கள், நீட் ஃபார் ஸ்பீடு மற்றும் ஃபோர்ஜா வீடியோ சீரிஸில் உள்ள கார்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

உட்புறம் புதிய டேஸ்போர்டால் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த டேஸ்போர்டு கிடைமட்ட லைன்களில் அனைத்து நான்கு ஏர்-கான் வெண்ட்ஸ்களையும் இணைக்கும் விதத்தில் உள்ளது. மேலும் இந்த புதிய டேஸ்போர்டு, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான 10.25 இன்ச் திரை மற்றும் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

இவை மட்டுமின்றி புதிய ஐ20 மாடலின் உட்புறத்தில் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழிற்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், வயல்லெஸ் சார்ஜர் மற்றும் சுற்றிலும் விளக்குகள் போன்றவற்றையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2020 ஹேட்ச்பேக் காரின் டாப் ட்ரிம்கள் மட்டும் கூடுதல் தேர்வாக ப்ரீமியம் போஸ் சவுண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளன.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

பாதுகாப்பு அம்சங்களாக ஹூண்டாயின் 'ஸ்மார்ட்சென்ஸ்' ட்ரைவிங் அசிஸ்ட் சிஸ்டம், முன்புறமாக கார் மற்ற கார்களுடன் மோதுவதை தடுக்க மானிடரிங் சிஸ்டம், காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம் உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ட்ராக்‌ஷன் கண்ட்ரோலை இந்த காரின் டாப் வேரியண்ட்கள் மட்டும் தான் பெறவுள்ளன.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

இயக்க ஆற்றலுக்கு புதிய தலைமுறை ஐ20 காரில் 48 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை ஹூண்டாய் நிறுவனம் பொருத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ஸ்பீடு இண்டெலிஜெண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படவுள்ள இந்த என்ஜின் செயல்படுதிறன் மற்றும் எரிபொருள் திறன் என இரு விதமான திறனையும் சிறப்பாக பெற்றிருக்கும்.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

இந்த டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் கியாவின் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளையும் 2020 ஐ20 மாடல் கார் பெறவுள்ளது. இதில் 1.2 லி பெட்ரோல் என்ஜினிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும், 1.5 லி டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ20 மாடலை உலகளவில் ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டது. இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த 2020 மாடலின் புதிய வீடியோ ஒன்றை சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

செப்டம்பரில் புதிய ஹூண்டாய் ஐ20 அறிமுகமான பிறகு டாடா அல்ட்ராஸ், மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் விரைவில் சந்தைக்கு வரவுள்ள ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ளது. கூடுதலான தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் என்ஜின் தேர்வுகளினால் ஹேட்ச்பேக் பிரிவில் இந்த கார் சிறப்பாக செயல்படும் என்பது நிச்சயம்.

Most Read Articles
English summary
Next-Gen Hyundai i20 India Launch Scheduled For September
Story first published: Monday, April 6, 2020, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X