டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

நிஸான் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான அரியா-வின் முதல் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள இந்த காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இந்த டீசரின் மூலம் நிஸானின் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை பற்றிய பெரும்பான்மையான விபரங்களை அறிய முடியவில்லை. இருப்பினும் இந்த எஸ்யூவி காரில் எல்இடி தரத்தில் ஹெட்லைட் வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

நிஸானின் அரியா எலக்ட்ரிக் காரின் தோற்றம் வருகிற ஜூலை மாதத்தில் உலகளவில் வெளியிடப்படவுள்ளது. இதனையும் தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் உறிதிப்படுத்துகிறது. நிஸானின் பூஜ்ஜிய மாசு உமிழ்வு காராக வெளிவரும் அரியா இந்நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக உள்ள லீஃப்-ன் மற்றுமொரு மாற்று காராக தயாரிக்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

நிஸான் காஷ்காய் மாடலுக்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் அரியா எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலில் வழங்கப்பட்டிருந்த ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அதே டிசைனில் பொருத்தப்பட்டுள்ளது.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

2019ல் CES 2020 கண்காட்சியில் அரியா மாடலின் மாதிரியை நிஸான் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. கூர்மையான லைன்கள், எதிர்கால கார்களுக்கு உண்டான வளைவு ப்ளேட்கள் மற்றும் நிமிர்ந்த தோற்றத்துடன் நிற்க வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் கார் 300 மைல்கள் (480 கிமீ) ரேஞ்ச்சை கொண்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

ஆனால் நிஸான் நிறுவனம் தோற்றத்தை காட்டிலும் இந்த எலக்ட்ரிக் காரின் இயக்கம் மற்றும் வசதியை தான் சிறப்பம்சங்களாக சுட்டி காட்டியது. ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை பெறவுள்ள அரியா எலக்ட்ரிக் காரில் மோட்டாரின் ஆற்றலின் பாதுகாப்பிற்காகவும், மறுவழங்கலிற்காகவும் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்குகள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் நிஸானின் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் தரமான ட்ரைவிங்கிற்காக ப்ரோபைலட் 2.0 வசதி கொண்டுவரப்படவுள்ளது. நிஸானின் ப்ரோபைலட் 2.0 சிஸ்டம் காருக்கு அடிப்படையான சில தொழிற்நுட்ப தேவைகளை வழங்கவல்லது.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இதில் ஆட்டோமேட்டிக் அவசரகால ப்ரேக்கிங், பாதசாரிகளை கணடறிதல், லேன் புறப்படு எச்சரிக்கை மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன. நிஸான் அரியா எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படவுள்ளன.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இதில் இரு மோட்டாரும் காரின் இரு முனைகளில் இருக்கும். ஆற்றல் ட்ரான்ஸ்மிஷனிற்கு எலக்ட்ரிக் கார்களுக்கு ஸ்பெஷலான புதிய ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் ‘இ-4ர்ஸ்' வழங்கப்படவுள்ளது. இது ஆக்ஸலேரேஷன், ப்ரேக்கிங் நிலைப்பாட்டை காரின் ஒவ்வொரு சக்கரத்திற்கும் சரியான அளவில் வழங்கும்.

டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

முன்னதாக இந்த எலக்ட்ரிக் மாடல் இந்த வருட இறுதிக்குள்ளாக சந்தையில் விற்பனை வந்துவிடும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்து இருந்தது. இதனால் அடுத்த வருடத்தில் வாடிக்கையாளர்களை அரியா எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சென்றடைய துவங்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Ariya electric SUV teased ahead of launch in July
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X