புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

நிஸான் கிக்ஸ் இ-பவர் ஹைப்ரிட் மாடலின் டீசர் தாய்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசல் ரயில் எஞ்சினில் பயன்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இந்த எஸ்யூவியில் புதிய வகை ஹைப்ரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாடல் சற்று அளவில் பெரிது. இந்த நிலையில், புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய கிக்ஸ் எஸ்யூவி தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 5 வரை நடக்க இருந்த சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையையடுத்து, 41வது சர்வதேச பேங்காக் ஆட்டோ ஷோ அடுத்த மாதம் 22 முதல் மே 3 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், புதிய நிஸான் கிக்ஸ் இ பவர் எஸ்யூவி மாடலின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அத்துடன், சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஹெட்லைட்மேக் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

சாதாரண எலெக்ட்ரிக் கார் மற்றும் ஹைப்ரிட் மாடல்களிலிருந்து இந்த கிக்ஸ் இ பவர் எஸ்யூவியின் ஹைப்ரிட் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அதாவது, டீசல் ரயில் எஞ்சினில் பயன்படுத்துவது போன்ற நுட்பம் இடம்பெற்றிருக்கிறது.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

இதன்படி, இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் பெட்ரோல் எஞ்சின் மூலமாக பேட்டரி சார்ஜ் ஏற்றப்பட்டு, மின்சார மோட்டார் மூலமாக முன்சக்கரங்கள் இயக்கப்படும். இதனால், மிகச் சிறந்த டார்க் திறனுடன் அதிக பிக்கப்பையும், கூடுதலாக 30 சதவீத எரிபொருள் சிக்கனத்தையும் இந்த எஸ்யூவி பெறும்.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

புதிய நிஸான் கிக்ஸ் இ பவர் ஹைப்ரிட் எஸ்யூவியில் வி வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்களுடன் வசீகரம் கூட்டப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

நிஸான் நிறுவனத்தின் இ-பவர் ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் அடங்கிய ஹைப்ரிட் தொகுப்பு இதுவரை ஜப்பானில் உள்ள நிஸான் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது தாய்லாந்து நாட்டிலும் இந்த ஹைப்ரிட் தொகுப்பு உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

புதுமையான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் நிஸான் கிக்ஸ் இ-பவர்... தாய்லாந்தில் அறிமுகமாகிறது!

இந்த புதிய நிஸான் கிக்ஸ் இ பவர் ஹைப்ரிட் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் ஹைப்ரிட் கார்களுக்கான அரசு சலுகைகள் அதிகரிக்கப்பட்டால், இந்த மாடலை நிஸான் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has released new teaser of Kicks e power hybrid model in Thailand ahead of its official unveil.
Story first published: Monday, March 30, 2020, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X