10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

நிஸான் நிறுவனம் லீஃப் இவி கார்களின் தயாரிப்பில் 5 லட்சத்தை உலகளவில் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

நிஸான் லீஃப் இவி உலகளவில் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்படும் முழு-எலக்ட்ரிக் காராகும். இதற்கு 5 லட்ச வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் சேர்ந்திருப்பது நிஸான் நிறுவனம் தற்போது கூறி நமக்கு தெரிய வந்துள்ளது.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

மேலும் பூஜ்ஜிய மாசு உமிழ்வு வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மைல்கல்லை இங்கிலாந்து, சந்தர்லேண்டில் உள்ள தொழிற்சாலை மூலமாக நிஸான் எட்டியுள்ளது.

நிஸான் லீஃப் இவி மாடலின் முதல் மாதிரி கார் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இந்த வகையில் பத்து வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள இதன் 5,00,000வது மாதிரி நார்வே நாட்டை சேர்ந்த மரியா ஜான்சன் என்பவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

இத்தகைய சிறப்புமிக்க எலக்ட்ரிக் காரை பெற்றது குறித்து ஜான்சன் கூறிகையில், நிஸான் லீஃப்பின் பெருமை வாய்ந்த 500,000வது உரிமையாளராக மாறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கார் உண்மையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் எங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது என கூறினார்.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

2011ஆம் ஆண்டிற்கான உலக கார், 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய கார், 2011 மற்றும் 2012ஆம் ஆண்டிற்கான ஜப்பானிய கார் உள்பட ஏகப்பட்ட விருதுகளை நிஸானின் இந்த எலக்ட்ரிக் மாடல் உலகம் முழுவதும் பெற்றுள்ளது. இத்தகைய விருதுகளுக்கு மிக முக்கிய காரணம் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் ப்ரோபைலட் வசதி ஆகும்.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

தகுந்த பாதுகாப்பு, கண்ட்ரோல் மற்றும் சவுகரிய வசதிகளுடன் லீஃப் இவி கார் கொண்டுள்ள இந்த ப்ரோபைலட் என்பது ‘ஹேண்ட்ஸ்-ஆன், அய்ஸ்-ஆன்' சிஸ்டம் ஆகும். இந்த சிஸ்டம் ஒரு-பெடல் இயக்கத்திற்காக காரை நிறுத்த, மீண்டும் ஸ்டார்ட் செய்ய, சாலையின் பாதையில் மையத்திலே தொடர்ந்து இயங்க வழிவகை செய்கிறது. இவை மட்டுமின்றி இ-பெடல் தொழிற்நுட்பத்தையும் இந்த சிஸ்டம் வழங்குகிறது.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட லீஃப் இவி காரை உலகம் முழுவதும் உள்ள அதன் உரிமையாளர்கள் இதுவரை 14.8 பில்லியன் கிலோமீட்டர் இயக்கியுள்ளதாகவும், இதன் மூலமாக சுமார் 2.4 பில்லியன் கிலோகிராம் கார்பன் டை ஆக்ஸைடு உமிழப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் நிஸான் நிறுவனம் கூறியுள்ளது.

10 ஆண்டுகளில் 5 லட்ச கார்கள் தயாரிப்பு... நிஸான் லீஃப் இவி-க்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு...

இத்தகைய புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறித்து நிஸான் ஐரோப்பாவின் எலக்ட்ரிக் பயணிகள் கார்கள் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவு தலைமை அதிகாரி ஹெலன் பெர்ரி கருத்து தெரிவிக்கையில், முன்னெப்போதையும் விட, நுகர்வோர் மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கி சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவே முயற்சிக்கின்றனர், இந்த முயற்சிக்கு நிஸான் லீஃப் தனது பங்கை கொடுக்கிறது என கூறினார்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan hits major milestone with half a million LEAF EVs built globally
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X