சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

நிஸான் நிறுவனம் அதன் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலான மேக்னைட்டின் உட்புற படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவு இந்திய சந்தையில் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாகவே முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள நிஸான் இந்த பிரிவுக்குள் புதிய தயாரிப்பு மூலமாக நுழைய தீவிரம் காட்டி வருகிறது.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

இதன் ஒரு பகுதியாக அதன் புதிய சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி மேக்னைட்டின் கான்செப்ட் மாடலை கடந்த மாதம் உலகளவில் இந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் உட்புற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது நிஸான் மேக்னைட் மாடலின் உட்புறம் மிகவும் ப்ரீமியம் தரத்தில் உள்ளது. விற்பனைக்கு வரும் காரின் கேபின் சற்று வித்தியாசமாக இருந்தாலும், இதில் உள்ள சில பாகங்கள் அப்படியே பொருத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

மேலும் இந்த படங்கள் மேக்னைட்டின் கேபின் சிவப்பு-கருப்பு என்ற ட்யூல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்படவுள்ளதையும் வெளிக்காட்டுகின்றன. இருக்கைகள் கருப்பு நிறத்தில் சிவப்பு நிற தையல்களுடன் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக இதே நிற கலவையில் வெளிப்புற நிறத்தேர்வையும் எதிர்பார்க்கலாம்.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

தேன்கூடு வடிவிலான டிசைனில் உள்ள டேஸ்போர்டு, தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரையை ஓட்டுனரின் பார்வைக்கு சரியான இடத்தில் கொண்டுள்ளது. மேலும் இதன் மைய கன்சோலில் புஷ் பொத்தான் ஸ்டார்ட் ஸ்விட்ச் உள்ளதையும் பார்க்க முடிகிறது.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

மற்ற ஏசி வெண்ட், கதவு ஹேண்டில்கள் உள்ளிட்டவை அலுமினியத்தால் ப்ரஷ்டு செய்யப்பட்டுள்ளன. இவையே மொத்த கேபினிற்கும் ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. ஸ்டேரிங் சக்கரம் சில கண்ட்ரோல்களை கொண்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இந்த மேக்னைட் கான்செப்ட் மாடலில் முழுவதும் டிஜிட்டல் தரத்தில் காணப்படுகிறது.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

ஏசி கண்ட்ரோல் ஸ்விட்ச்கள் மற்ற நிஸான் கார்களில் உள்ளதை போல் காட்சியளிக்கின்றன. முன்பு வெளியாகி இருந்த படங்கள் மற்றும் தற்போது வெளியாகியுள்ள உட்புற படங்களின் மூலம் பார்க்கும்போது நிஸான் மேக்னைட் கான்செப்ட் வெளிப்புறத்தை கம்பீரமாகவும், உட்புறத்தை ப்ரீமியம் தரத்திலும் கொண்டுள்ளது.

சிவப்பு-கருப்பு நிற கேபினுடன் தயாராகும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி.. உட்புற படங்கள் வெளியீடு

இந்த நிஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், டர்போ பெட்ரோல் என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் 95 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan showcases interiors of “Nissan Magnite concept”
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X