இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த கார்களில் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் காரும் ஒன்று. இந்த கார் இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த நிஸான் மேக்னைட் கார் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியது. இந்த காரை நடப்பாண்டின் ஆரம்பத்தில் இந்த நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருந்தது. அப்போதே வாகன பிரியர்கள் பலரை இக்கார் கவர்ந்து இழுத்தது. இந்த நிலையில் மிகக் குறைந்த விலையில் இக்கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

நான்கு விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை, எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரீமியம் ஆகும். இக்காரின்அறிமுகத்தைக் கொண்டாடும் விதமாக சிறப்பு விலையாக ரூ. 4.99 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31 டிசம்பர் வரையில் மட்டுமே இக்காரை இந்த விலையில் புக் செய்ய முடியும்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

இதன் பின்னர், ஜனவரி 1ம் தேதி முதல் இக்கார் ரூ. 5.54 லட்சம் என்ற விலையில் விற்கப்பட இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் விலை ஆகும். இதன் உயர் நிலை வேரியண்டிற்கு ரூ. 9.35 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இக்காருக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

விரைவில் டெலிவரி பணிகளும் தொடங்கும். நிஸான் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் இதுவாகும். இந்த காரின் குறைந்த விலையைப் பார்த்து இதன் மதிப்பைக் குறைவாக எடைப் போட்டுவிட வேண்டாம். ஏனெனில், இக்காரில் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை நிஸான் நிலை நிறுத்தியிருக்கின்றது. இதன் டிசைனும் கண் கவரும் வகையில் இருக்கின்றது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

முகப்பு பகுதியில் இருக்கும் க்ரில் மற்றும் எல்இடி மின் விளக்குகள் காருக்கு அட்டகாசமான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, எல் வடிவத்தில் இருக்கும் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பம்பரின் இரு முனைகளிலும் இருக்கும் பனி விளக்கு ஆகியவை காரின் கவர்ச்சியான தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் இருக்கின்றது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

முகப்பு பகுதியைப் போலவே காரின் பக்கவாட்டு பகுதியும் மிகவும் அட்டகாசமானதாக இருக்கின்றது. சுழலும் மின் விசிறியின் இறக்கைப் போன்ற வடிவத்தில் உள்ள வீல், ஓஆர்விஎம்கள், இன்டிகேட்டர் மற்றும் கருப்பு நிற கிளாடிங்குகள் காரின் பக்கவாட்டு பகுதியின் கவர்ச்சி தோற்றத்திற்கு வலு சேர்த்துள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

பின் பக்க தோற்றம், பெரிய அளவு மின் விளக்குகள், சில்வர் நிறத்திலான கூறுகள், புதிய தோற்றத்திலான பம்பர் மற்றும் மேக்னைட் உள்ளிட்டவை காரின் பின் பக்க கவர்ச்சியான தோற்றத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. இதேபோன்று, காரின் உட்பகுதியிலும் சில மனம் கவரும் வேலையை நிஸான் செய்திருக்கின்றது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

இருக்கை முதல் டேஷ்போர்டு வரை அனைத்தும் கருப்பி நிறத்தில் காட்சியளிக்கின்றன. இதன் டேஷ்போர்டில் 8 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆட்டோஉள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாகும். இத்துடன், தானியங்கி க்ளைமேட் சேஞ்ஜ், ஒயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

இதுதவிர, ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், இம்பேக்ட் சென்சிங் ஆட்டோ டூர் அன்லாக், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டூர் லாக், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

மேலும், காரைச் சுற்றி 360 டிகிரி பரப்பளவை மிக தெளிவாகக் காண்பிக்கின்ற வகையில் கேமிரா வழங்கப்பட இருக்கின்றது. இது காரை சுற்றிலும் நிகழக்கூடிய நிகழ்வுகளை துள்ளியமாக காரின் உட்புறத்தில் இருக்கும் திரையின் வாயிலாக காண்பிக்கும். இது மிக குறுகிய பாதையில் கூட சுலபமாக பார்க் செய்ய உதவும். இதனை தேவைக்கேற்ப சுழற்றிக் கொள்ள முடியும்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் அடங்கும். இதில், நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின் 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோன்று, 1.0 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் வேகக்கட்டுப்பாடு கருவிகள் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மிகக் குறைந்த விலையில் குறிப்பாக யாரும் எதிர்பார்த்திரா விலையில் விற்பனைக்கு வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கொண்டு நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் பெரும் புரட்சியை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

மேக்னைட் மைலேஜ் விபரம்:

நிஸான் மேக்னைட் காரின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 18.75 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜையும், சிவிடி மாடல் ஒரு லிட்டருக்கு 17.7 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும். இது அராய் நிறுவனம் சான்று வழங்கிய மைலேஜ் ஆகும்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

விலை விபரம்:

வேரியண்ட் எக்ஸ்இ எக்ஸ்எல் எக்ஸ்வி எக்ஸ்வி பிரீமியம்
1.0 பெட்ரோல் ₹4,99,000 ₹5,99,000 ₹6,68,000 ₹7,55,000
1.0 டர்போ பெட்ரோல் ₹6,99,000 ₹7,68,000 ₹8,45,000
1.0L டர்போ பெட்ரோல் சிடிவி ₹7,89,000 ₹8,58,000 ₹9,35,000
Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Launched In India: Introductory Prices Start At Rs 4.99 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X