Just In
- 46 min ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 12 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 13 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Sports
ஒரு இன்னிங்சில் ஆடினால் போதுமா.. பொறுப்பின்றி விக்கெட்டை இழக்கும் மூத்த வீரர்.. கோபத்தில் பிசிசிஐ!
- Movies
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- News
கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காத்திருந்தது போதும், ஷோரூம்களை வந்தடைந்தது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார்!!
நிஸானின் புதிய அறிமுகமாக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மேக்னைட் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய மேக்னைட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை வருகிற நவம்பர் 26ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இருப்பினும் இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் துவங்கப்படவில்லை.

குறிப்பிட்ட சில டீலர்ஷிப் மையங்களில் மட்டும் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரூ.25,000 என்ற முன் தொகையுடன் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த புதிய நிஸான் கார் சில டீலர்ஷிப் மையங்களை வந்தடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக சில படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல்களின்படி பார்க்கும்போது மேக்னைட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி அப்பர் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் என்ற நான்கு விதமான ட்ரிம்களில் இந்த கார் சந்தைப்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் நேர்த்தியான ஹெட்லேம்ப்கள், பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ப்ரோஜெக்டர் விளக்குகள் உடன் க்ரோம் பார்டரை கொண்ட பெரிய க்ரில் அமைப்பை மேக்னைட் பெற்றுள்ளது. 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், சில்வர் நிறத்தில் மேற்கூரை தண்டவாளங்கள், இரட்டை-நிறத்தில் மேற்கூரை தேர்வு உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்படவுள்ள மற்ற வெளிப்பக்க சிறப்பம்சங்களாகும்.

ரெனால்ட்-நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் அடிப்படையில் வெளிவரும் மேக்னைட்டின் உட்புறம் 7 இன்ச்சில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் 360-கோண கேமிரா உள்ளிட்டவற்றுடன் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள நிஸான் மேக்னைட்டில் இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக கொடுக்கப்படவுள்ளன. இதில் ஒன்றான 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளன.

இவற்றுடன் வழங்கப்படும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெட்ரோல் என்ஜின் 18.75 kmpl மைலேஜ்ஜையும், டர்போ பெட்ரோல் என்ஜின் 20 kmpl மைலேஜ்ஜையும் வழங்கும் என கூறப்படுகிறது. அதுவே கூடுதல் தேர்வாக வழங்கப்படும் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் மூலமாக 17.7 kmpl மைலேஜ்ஜை பெறலாம்.