கவரும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

அசத்தும் டிசைன் அம்சங்களுடன் நிஸான் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கான்செப்ட் வடிவில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தயாரிப்பு நிலை மாடல் அந்தஸ்துடன் விற்பனைக்கு வர இருக்கும் இந்த எஸ்யூவியின் கான்செப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள், கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

இந்தியாவில் 4 மீட்டருக்குள் உருவாக்கப்படும் காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், இந்த ரகத்தில் ஏராளமான மாடல்கள் தேர்வுக்கு உள்ளதுடன், அனைத்து மாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க விற்பனையும் கிடைத்து வருகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

எனவே, இந்த ரகத்தில் அனைத்து நிறுவனங்களும் ஒரு மாடலை வைத்திருப்பது வர்த்தகத்திற்கு பலமாக கருதுகின்றன. இந்த வரிசையில் விரைவில் நிஸான் நிறுவனமும் சேர இருக்கிறது. ஆம், இந்தியாவிற்காக புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில், அதாவது, வரும் அக்டோபர் - மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முயற்சியாகவும், பிரபலப்படுத்தும் நோக்கிலும் தனது காம்பேக்ட் எஸ்யூவியை கான்செப்ட் வடிவில் இன்று வெளியிட்டு இருக்கிறது நிஸான். மேலும், மேக்னைட் என்ற பெயரில் இந்த எஸ்யூவி வருவதையும் உறுதி செய்துள்ளது.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

பல்வேறு நாடுகளில் பிரபலமான மாடல்களாக இருக்கும் நிஸான் நிறுவனத்தின் பேட்ரோல், பாத்ஃபைன்டர், அர்மதா, எக்ஸ்-ட்ரெயில், ஜூக், காஷ்கய் வரிசையில் இந்த எஸ்யூவி புதிய ரகத்திலான எஸ்யூவி மாடலாக உருவாகி இருக்கிறது. மேலும், நிஸான் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிகச் சிறப்பான தோற்றத்துடன் மேக்னைட் எஸ்யூவி வருவது கான்செப்ட் மாடல் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் முன்புற க்ரில் அமைப்பு மிக வசீகரமாக இருக்கிறது. மிக மெல்லிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் நவீன யுக மாடலாக காட்டுகிறது. பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

வெளிப்புறம் மட்டுமின்றி, உட்புறமும் மிகவும் தரமான பாகங்களுடன் அதிக பிரிமீயம் அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், போதுமான இடவசதி ஆகியவை முக்கிய விஷயங்களாக இருக்கும்.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே ரெனோ பிராண்டிலும் புதிய எஸ்யூவி விரைவில் வர இருக்கிறது.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரெனோ ட்ரைபர் காரில் வழங்கப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 அசத்தும் டிசைன்... நிஸான் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் அறிமுகம்!

மேலும், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has revealed of it's all new Magnite Subcompact and will be launched in India second half current fiscal year.
Story first published: Thursday, July 16, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X