புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட புதிய நிஸான் மேக்னைட் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த காரின் 7 முக்கிய விஷயங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

ரெனோ - நிஸான் கூட்டணி பிளாட்ஃபார்ம்

ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ என்ற கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த புதிய நிஸான் மேக்னைட் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்புக் கொள்கையானது ரெனோ மற்றும் நிஸான் நிறுவனங்களின் சிறிய கார்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதில், ரெனோ கார் நிறுவனம் ஏற்கனவே கார்களை உருவாக்கிய நிலையில், முதல்முறையாக நிஸான் நிறுவனம் இந்த கட்டமைப்புக் கொள்கையின் உருவாக்கி இருக்கும் முதல் கார் மாடல் நிஸான் மேக்னைட் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

டிசைன்

புதிய நிஸான் மேக்னைட் காரின் டிசைன் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. முதல் பார்வையிலேயே ஈர்க்கும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய வீல் ஆர்ச்சுகள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், கச்சிதமான தோற்றம் ஆகியவை இதற்கு சிறப்பான வசீகரத்தை கொடுக்கிறது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

டட்சன் முக அமைப்பு

அதேநேரத்தில், நிஸான் நிறுவனத்தின் டட்சன் பட்ஜெட் கார் பிராண்டில் விற்பனை செய்யப்படும் டட்சன் ரெடிகோ, கோ ஆகிய கார்களின் முகப்பு க்ரில் அமைப்பை இந்த காரில் பயன்படுத்தி இருக்கின்றனர். எனினும், காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் மாடர்ன் டிசைன் கொண்ட கார்களில் நிஸான் மேக்னைட் காரும் ஒன்றாக இருக்கும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

இன்டீரியர்

வெளிப்புறத்தை போலவே, இன்டீரியரும் மிகச் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பு, டேப்லெட் வடிவிலான தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு பொத்தான்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் என அசத்தலாகவே இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் டில்ட் வசதியுடன் இருப்பதுடன் முன் இருக்கைகள் வசதியாகவே இருக்கின்றன. பின் இருக்கைகளும் மூன்று பேர் அமர்வதற்கான வாய்ப்பை வழங்கும். இந்த காரில் 336 லிட்டர் பூட்ரூம் இடவசதி இருக்கிறது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

முக்கிய வசதிகள்

புதிய நிஸான் மேக்னைட் காரில் 8.0 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இது வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கும் விதத்தில் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியாக இருக்கும். இன்டர்நெட் வசதியுடன் பல்வேறு வசதிகளை ஸ்மார்ட்வாட்ச் மூலமாக கட்டுப்படுத்தும் அம்சமும் உள்ளது. ஆப்ஷனலாக வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர் ஆகியவற்றை வழங்கவும் நிஸான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோன்று, 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த காரின் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் வெஹிக்கிள் டைனமிக் கன்ட்ரோல், ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டிராக்ஸன் கன்ட்ரோல் சிஸ்டம், இபிடியுடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள், ஆன்ட்டி ரோல் பார்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கும். டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வசதியும் இடம்பெறுகிறது. ஆக பாதுகாப்பு தொழில்நுட்பங்களிலும் நிறைவை தரும் மாடலாக இருக்கும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

எஞ்சின் தேர்வுகள்

அண்மையில் நிஸான்மேக்னைட் காரை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு வழங்கப்பட்டது. அப்போது, எமக்கு பார்வைக்கு கிடைத்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பெருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது. எஞ்சின் தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுதவிர்த்து, சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் அதிக வர்த்தக வளம் மிக்க சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிஸான் மேக்னைட் கார் மிக குறைவான விலை தேர்வாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. அதாவது, ரூ.6.50 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கலாம். தீபாவளிக்கு முன்னதாகவே இந்த காரை கொண்டு வருவதற்கான திட்டத்தில் நிஸான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை எதுவும் இல்லை.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Here are few important things about the all new Nissan Magnite sub compact SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X