Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 14 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- News
சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!
அசத்தும் டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரின் அறிமுக தேதி விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன. அனைத்து மாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை உள்ளது. இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் நிஸான் நிறுவனமும் மேக்னைட் என்ற எஸ்யூவியுடன் களமிறங்க உள்ளது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் டிசைன் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விலை குறைவான தேர்வாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியானதால், தனி கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் வரும் டிசம்பர் 2ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரில் 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் வழங்கப்படும். புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி 5 ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், 3 டியூவல் டோன் தேர்வுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் இரண்டுவிதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். முதல் தேர்வானது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

அடுத்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் ஆகியவற்றுடன் போட்டி போடும்.