நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

யாரும் எதிர்பாராத வகையில் மிக சவாலான ஆரம்ப விலையில் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட் மட்டுமின்றி, ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் பற்றிய சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் தெரிந்துகொள்ளலாம்.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

விலை ஒப்பீடு

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.4.99 லட்சம் என்ற அறிமுகச் சலுகை விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா சொனெட் எஸ்யூவிதான் குறைவான ஆரம்ப விலை கொண்ட மாடலாக இருந்து வந்தது. கியா சொனெட் எஸ்யூவி ரூ.6.71 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய மாடலானது ரூ.1.72 லட்சம் வரை குறைவான விலையில் வந்து கிடுகிடுக்க வைத்துள்ளது.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

ஹேட்ச்பேக் கார்களுக்கும் சவால்

டாடா அல்ட்ராஸ் (ரூ.5.44 லட்சம்), மாருதி பலேனோ (ரூ.5.64 லட்சம்) கார்களை விடவும் இந்த புதிய மாடல் மிக சவாலான விலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. அதாவது, ரூ.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான ஹேட்ச்பேக் கார்களுக்கும் இது நெருக்கடியாக இருக்கும்.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

எஞ்சின்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் எஞ்சின் தேர்வுகளும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலேயே அமைந்துள்ளது. அதாவது, பட்ஜெட் பிரச்னை இருப்பவர்களுக்கு சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் (71 பிஎச்பி), அதிக செயல்திறன் மற்றும் பட்ஜெட் பிரச்னை இல்லாதவர்களுக்கு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் (99 பிஎச்பி) தேர்வும் உள்ளது.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

சிவிடி தேர்வு

இரண்டு எஞ்சின்களுமே மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைப்பதுடன், இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும். மேலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் சந்தையில் மிக சவாலான விலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

பரிமாணம்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி 3,994 மிமீ நீளமும், 1,758 மிமீ அகலமும், 1,572 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இந்த கார் 2,500 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. ஹேட்ச்பேக் கார்களைவிடவும், போட்டியாளர்களுக்கு இணையான வகையிலும் உட்புற இடவசதியை பெற்றிருப்பது பயணங்களை சிறப்பானதாக மாற்றும். இந்த கார் 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிருப்பதும் இந்த காரை நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு துணை புரியும்.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

வசதிகள்

சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறப்பான வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் எல்இடி பை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என வாடிக்கையாளர்களின் மனதை குளிர வைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் ஜேபில் ஸ்பீக்கர் சிஸ்டம், படூல் விளக்குகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சுற்றுப்புறத்தை பார்த்துக் கொள்வதற்கான 360 டிகிரி மானிட்டர், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நிஸான் மேக்னைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

மதிப்பு

குறைவான பட்ஜெட்டுடன் எஸ்யூவி கனவில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி கச்சிதமாக பூர்த்தி செய்யும். டிசைன், இடவசதி, விலை என அனைத்திலும் மதிப்பு மிக்க தேர்வாக இருக்கும். ஆனால், நிஸான் பிராண்டு மீதான வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் குறைவான நம்பிக்கை, விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்டவை இதற்கு பாதகமான விஷயங்களாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Here are some top things you should know about Nissan Magnite SUV.
Story first published: Thursday, December 3, 2020, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X