Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய நிஸான் மேக்னைட் Vs கியா சொனெட்: எது வாங்குவது சிறந்தது?
சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தயாரிப்பை அதிக மதிப்பு கொண்டதாக இந்த ரகத்தில் களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிஸான் மேக்னைட் ரூ.4.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்து கிடுகிடுக்க வைத்துள்ளது.

இந்த மார்க்கெட்டில் இதுவரை குறைவான விலை தேர்வாகவும், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாகவும் இருந்து வரும் கியா சொனெட் காருக்கும் புதிய நிஸான் மேக்னைட் காருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இது எந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என்பதை அலசி ஆராய்ந்து இந்த செய்தியில் தீர்ப்பை வழங்கி இருக்கிறோம்.

நிஸான் மேக்னைட் டிசைன்
நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் டிசைன் அதிக வசீகரமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. முன்புறத்தில் க்ரோம் பட்டையுடன் கூடிய பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், கூர்மையான டிசைனில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், அசத்தும் டிசைனில் அலாய் வீல்கள், கவர்ச்சிகரமான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இந்த காருக்கு அதிக வசீகரத்தை கொடுக்கின்றன. முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுக்கும் வகையில் இதன் டிசைன் அமைந்துள்ளது.

கியா சொனெட் டிசைன்
சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக வசீகரமான டிசைன் அம்சங்கள் கொண்ட மாடலாக கியா சொனெட் எஸ்யூவியை கூறலாம். காரின் முன்பக்க க்ரில், ஹெட்லைட், அலாய் வீல்கள், டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் என ஒவ்வொரு அங்கமும் கண்களை காந்தம் போல் கவர்ந்து இழுக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு கார்களும் டிசைனில் வசீகரித்தாலும், கியா சொனெட்தான் டிசைன் விஷயத்தில் சற்று கூடுதல் மதிப்பெண்களுடன் ஸ்கோர் செய்துவிடுகிறது. குறிப்பாக, கியா சொனெட் ஜிடி லைன் அதிக வசீகரத்தை பெற்றுள்ளது.

நிஸான் மேக்னைட் இன்டீரியர்
நிஸான் மேக்னைட் காரின் இன்டீரியர் நேர்த்தியாகவும், அதிக கவர்ச்சியாகவும் உள்ளது. அழகிய ஏசி வென்ட்டுகள் மற்றும் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேர்த்தியான டயல்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பு இந்த காருக்கு சிறப்பு சேர்க்கிறது. இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஆனால், அது முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போல இருந்தாலும், வீடியோ கேம் சாதனத்தின் திரை போல இருப்பது உறுத்தலாக உள்ளது. இருக்கைகள், டேஷ்போர்டு பிளாஸ்டிக் ஆகியவை பிரிமீயமாக காட்டுகிறது.

கியா சொனெட் இன்டீரியர்
வெளிப்புறத்தை போலவே கியா சொனெட் காரின் இன்டீரியரும் மிகவும் அருமையாக உள்ளது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மற்றும் இன்ஸ்்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு செவ்வக வடிவில் ஒரே அமைப்பாக டேஷ்போர்டில் வீற்றுள்ளது. அதற்கு கீழாக அழகிய ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றுள்ளன. இருக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் தரமும் நன்றாக உள்ளது. இந்த விஷயத்திலும் கியா சொனெட் சற்று ஆழமாக மனதில் பதிந்து விடுகிறது.

நிஸான் மேக்னைட் வசதிகள்
நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை வயர்லெஸ் முறையில் இணைக்கும் வசதி இதன் ரகத்திலேயே முதல்முறையாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஜேபில் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள் என இந்த பட்டியல் நீள்கிறது.

கியா சொனெட் வசதிகள்
கியா சொனெட் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதன் ரக கார்களில் பெரிய திரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், போஸ் ஸ்பீக்கர்களுடன் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், ஏர் பியூரிஃபயர், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், மூன்று விதமான டிரைவிங் மோடுகள் என வசதிகளிலும் மேம்பட்ட தேர்வாக இருக்கிறது கியா சொனெட்.

நிஸான் மேக்னைட் எஞ்சின் தேர்வுகள்
நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதில், சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியா சொனெட் எஞ்சின் தேர்வுகள்
கியா சொனெட் எஸ்யூவில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்(83 பிஎச்பி பவர்), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்(120 பிஎச்பி பவர்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் (100 பிஎச்பி பவர்) என மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஐஎம்டி மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. டீசல் எஞ்சினுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. செயல்திறன், மைலேஜ், நம்பகத்தன்மை என அனைத்திலும் கியா சொனெட் எஞ்சின் தேர்வுகள் நிஸான் மேக்னைட்டை புறந்தள்ளி முன்னே பாய்ந்து செல்கின்றன.

பரிமாணம்
நிஸான் மேக்னைட் எஸ்யூவி 3,994 மிமீ நீளமும், 1,758 மிமீ அகலமும், 1,572 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. மறுபுறத்தில் கியா சொனெட் எஸ்யூவி 3,995 மிமீ நீளமும், 1,790 மிமீ அகலமும், 1,642 மிமீ உயரமும் பெற்றிருக்கின்றன. இரண்டு கார்களும் 2,500 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கின்றன. நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 336 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும், கியா சொனெட்டில் 392 லிட்டர்கள் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளன.

விலை ஒப்பீடு
புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.4.99 லட்சம் முதல் ரூ.9.35 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், கியா சொனெட் எஸ்யூவி ரூ.6.71 லட்சம் முதல் ரூ.12.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கின்றன. நிஸான் மேக்னைட் எஸ்யூவியைவிட கியா சொனெட் பேஸ் வேரியண்ட் விலை ரூ.1.72 லட்சம் வரையிலும், டாப் வேரரியண்ட்டின் விலை ரூ.3.64 லட்சம் வரையில் கூடுதலாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அதிக மதிப்பை நிஸான் மேக்னைட் பெறுகிறது. ஆனால், விலையை மட்டும் வைத்து எடை போட்டுவிடலாமா?

எது வாங்கலாம்?
நிஸான் மேக்னைட் மற்றும் கியா சொனெட் என இரண்டு கார்களும் பெரும்பாலான அம்சங்களில் தனித்துவமான மதிப்பை அளிக்கின்றன. அதேநேரத்தில், நிஸான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம், டீலர்கள் கட்டமைப்பு, காரின் மறுவிற்பனை மதிப்பு போன்றவற்றில் பின்தங்குகிறது. எனவே, இரண்டு கார்களில் அதிக மதிப்பை கியா சொனெட் கார்தான் பெறுகிறது. பட்ஜெட் பிரச்னை உள்ளவர்கள் நிஸான் மேக்னைட் எஸ்யூவியை பரிசீலிக்கலாம். பட்ஜெட் குறை இல்லாதவர்களுக்கு கியா சொனெட் கார்தான் சிறந்த தேர்வாக அமையும்.