நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

நிஸான் நிறுவனத்தில் இருந்து பி-பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் புதிய டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

நிஸான் இந்தியா நிறுவனம் தற்சமயம் வெறும் இரு மாடல்களை மட்டும் தான் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதனால் தான் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல்கள் உள்ள காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தனது புதிய தயாரிப்பு காரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

மேக்னைட் என அழைக்கப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடலானது நிஸான் நிறுவனம் இந்திய சந்தைகாக ரெனால்ட் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக ரெனால்ட் கிகர் மாடலின் ப்ளாட்ஃபாரம் மற்றும் என்ஜின் அமைப்பை பகிர்ந்து கொண்டுள்ளது.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

வருகிற ஜூலை 16ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகவுள்ள புதிய நிஸான் மேக்னைட் கார், இந்திய சந்தைக்கான இந்நிறுவனத்தின் முதல் பி-பிரிவு எஸ்யூவி மாடலாக விளங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இதன் டீசர் படத்தில் கார் இதுவரை எந்த நிஸான் மாடலிலும் இல்லாத வகையில் முன்புற க்ரில் அமைப்பை பெற்றுள்ளது.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

இதனுடன் கூர்மையான தோற்றத்தில் எல்இடி ஹெட்லைட் சிஸ்டம் மற்றும் பம்பரில் பூமாராங் வடிவிலான எல்இடி டிஆர்எல்களையும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் கொண்டுள்ளது. படத்தில் காட்டியுள்ளபடியான டிசைனில் சக்கரங்களை நிச்சயம் இதன் விற்பனை மாடலில் எதிர்பார்க்க முடியாது.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

ஆனால் பக்கவாட்டு க்ளாடிங் மற்றும் முன்புற பம்பருக்கு அடியில் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட் உள்ளிட்டவற்றை அறிமுகத்தின்போது நிஸானின் இந்த எஸ்யூவி கார் கொண்டிருக்கும். இதேபோன்று விண்டோ லைனிற்கு க்ரோம்-லைனிங், கருப்பு நிறத்தில் ரூஃப் மற்றும் பின்புறத்தில் எல்இடி விளக்குகள் போன்றவற்றையும் இதன் விற்பனை மாடலில் எதிர்பார்க்கலாம்.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

உட்புறத்தில் பிரபலமான மொபைல் ஒஎஸ்-க்கு இணக்கமானதாக கனெக்டட் கார் தொழிற்நுட்பத்துடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

அதேபோல் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை நிஸான் நிறுவனம் இந்த புதிய மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் பொருத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சந்தையில் பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனையாகவுள்ள இரண்டாவது காம்பெக்ட் எஸ்யூவி மாடலாக புதிய மேக்னைட் கார் விளங்கவுள்ளது.

நிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்...! ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...

ஏனெனில் மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை டீசல் மாடலாக சமீபத்தில் தான் மாற்றியது. இந்த புதிய காரின் விலையில் நிஸான் நிறுவனம் மிகவும் கவனமாக செயல்படும். ஏனெனில் இந்த எஸ்யூவி கார் தான் நிஸான் ப்ராண்ட்டிற்கு இந்தியாவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India releases glimpses of the much-awaited upcoming B-SUV
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X