எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு போட்டியாக புத்தம் புதிய எஸ்யூவி மாடலை நிஸான் கார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுதவிர்த்து, பல புதிய கார் மாடல்களுடன் இந்திய வர்த்தகத்தை செம்மைப்படுத்த உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

உலக அளவில் தனது கார் வர்த்தகத்தை சீராக்கும் நடவடிக்கைகளில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நீண்ட காலமாக கார் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியாமல் தவித்து வருகிறது. இதற்கு முடிவு கட்டி நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

மேலும், ஐரோப்பிய சந்தையிலிருந்து விடைபெறுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் வர்த்தகத்தை சீராக்குவதுடன் 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் இந்த புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

அதன்படி,ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் 8 புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை வலுவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

மேலே குறிப்பிட்ட நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செலவீனத்தை குறைத்து வர்த்தகத்தை செம்மைப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், 8 புதிய மாடல்களுடன் இந்த நாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

இந்தியாவில் புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் நிஸான் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த புதிய எஸ்யூவி எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு நிகரான ரகத்தில் வர இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

அதேபோன்று, காம்பேக்ட் ரக செடான் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளது. மேலும், இ-பவர் தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள் மற்றும் மின்சார மாடல்களும் இந்த திட்டத்தின் கீழ் அடக்கம்.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளில் கார் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் பெற முடியும் என்று நிஸான் நம்பிக்கை வைத்துள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார் உற்பத்தி ஆலைகளில் இருந்து புதிய நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தக வாய்ப்பையும் ஆய்வு செய்து வருகிறது.

எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

புதிய கார் மாடல்கள் தவிர்த்து, கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தையும் தனது அனைத்து கார்களிலும் கொடுப்பதற்கும் நிஸான் திட்டமிட்டுள்ளது. இதனை மேம்படுத்துவதற்கான பணிகளிலும் அந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க முடியும் என்று நம்புகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Japanese car maker, Nissan is planning to launch new midsize SUV and sedan car moldes in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X