மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

மேக்னைட் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் புதிதாக விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை நிஸான் கார் நிறுவனம் திறந்துள்ளது.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

இந்தியாவில் மிக நீண்ட காலமாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற முடியாமல் நிஸான் நிறுவனம் தவித்து வருகிறது. கற்ற வித்தைகளை போட்டுக் காட்டியும் இந்தியாவில் முன்டியடிக்க முடியவில்லை.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

இந்த நிலையில், இந்திய வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிஸான் நெக்ஸ்ட் என்ற கொள்கையின் கீழ் பல முயற்சிகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக இந்தியர்கள் விரும்பும் வகையில் புதிய கார் மாடல்களை களமிறக்கவும், விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை வலுப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்த கொள்கையின் கீழ் அதிக வர்த்தக வளம் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மேக்னைட் என்ற புத்தம் புதிய எஸ்யூவியை களமிறக்க உள்ளது.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

இந்த நிலையில், மேக்னைட் எஸ்யூவிக்கு வலு சேர்க்கும் விதத்தில், புதிதாக 20 விற்பனை நிலையங்களையும், 30 சர்வீஸ் நிலையங்களையும் நிஸான் திறந்துள்ளது. இந்த புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்க உறுதுணையாக இருக்கும்.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

அதேபோன்று, ஆன்லைன் மூலமாக கார் வாங்குவதற்கான கட்டமைப்பையும் மேம்படுத்தி உள்ளது. கார் மாடல்களை மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டரில் நேரடியாக பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும் வகையிலும், தொழில்நுட்ப மற்றும் சிறப்பம்சங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

இதுதவிர்த்து, 90 நிமிடங்களில் கார்களை சர்வீஸ் செய்து தருவதற்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டத்தையும் நிஸான் அறிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த சர்வீஸ் திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு அதிக பயன் தரும் வகையில் அமையும்.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

மேலும், நிஸான் சர்வீஸ் க்ளினிக்ஸ் என்ற பெயரில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. நாட்டின் 100 இடங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தங்களது கார்களை சர்வீஸ் செய்து கொள்வதற்கான வசதியை நிஸான் கனெக்ட் அப்ளிகேஷன் மூலமாக புக்கிங் செய்து பெறலாம்.

மேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்!

இதுதவிர்த்து, வீட்டிற்கே வந்து காரை பிக்கப் செய்து சர்வீஸ் செய்து தரும் சிறப்புத் திட்டத்தையும் நிஸான் அறிவித்துள்ளது. நாட்டின் 1,500 நகரங்களில் சாலை அவசர உதவித் திட்டத்தின் மூலமாக நிஸான் சேவைகளை வாடிக்கையாளர்களை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India has announced the expansion of its sales and service network in the Indian market. The company has introduced 50 new customer touchpoints across the country, including 30 service stations and 20 sales showroom.
Story first published: Friday, November 27, 2020, 14:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X