இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் 2வது டீசர் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனால், இந்த சந்தையில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. ஒவ்வொரு கார் நிறுவனமும் இந்த சந்தையில் ஒரு மாடலை வைத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனை மனதில் வைத்து நிஸான் கார் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

இதன்படி, கடந்த மாதம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பக்கவாட்டு டிசைனை காட்டும் விதத்தில், முதல் டீசரை வெளியிட்டது. இன்று டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைனை காட்டும் விதத்தில் மற்றொரு டீசரை வெளியிட்டு இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது நிஸான் கார் நிறுவனம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியில் எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ட்ரைபர் உள்ளிட்ட கார்களில் இருந்து சற்றே வேறுபடும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர, முன்புறத்தில் எல்இடி கெயிடு லைட்டுகள், தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

நிஸான் எஸ்யூவி கார்களின் பல டிசைன் தாத்பரியங்கள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், கருப்பு வண்ண சி பில்லர் அமைப்பு, ரியர் ஸ்பாய்லர், சைடு பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியானது ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ கட்டமைப்புக் கொள்கையில்தான் உருவாக்கப்படுகிறது. இது நிச்சயம் பல்வேறு பிரிமீயம் அம்சங்களுடன் தனித்துவமான தேர்வாக காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியில் ரெனோ நிறுவனத்தின் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது, ட்ரைபர் காரில் பயன்படுத்தப்பட இருக்கும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த புதிய எஸ்யூவி வர இருக்கிறது.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கும் இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது நிச்சயம் போதுமான செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது தீபாவளி பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.7.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் அனலை பரப்பும் நிஸான் எஸ்யூவி... 2வது டீசரும் வெளியீடு!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்களுடன் போட்டி போடும். நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் பிளாட்ஃபார்மிலேயே ரெனோ நிறுவனமும் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Japanese car maker, Nissan has released the second teaser for its new compact SUV for India.
Story first published: Wednesday, February 12, 2020, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X