சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸான் தனது மைக்ரா, மைக்ரா ஆக்டிவ் மற்றும் சன்னி மாடல்களின் பெயர்களை தனது அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

இந்த இரு மாடல்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் தற்போது நிஸான் நிறுவனத்தின் இணையத்தள பக்கம், பிஎஸ்6 கிக்ஸ் மற்றும் ஜிடி-ஆர் என்ற இரு மாடல்களின் பெயர்களை மட்டும் தான் கொண்டுள்ளது.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

இந்த இரு மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் இவை இரண்டும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவில்லை. இந்நிறுவனத்தின் கிக்ஸ் மாடலை போல் இந்த இரு கார்களும் விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காததால் பிஎஸ்6 தரத்திற்கு இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

முதன்முதலாக கடந்த 2010ல் நிஸான் நிறுவனம் இந்தியாவில் நுழைந்த போது நான்காம் தலைமுறை மைக்ரா ஹேட்ச்பேக் மாடலை தான் அறிமுகப்படுத்தியது. அதன்பின் 2014ல் சில அப்டேட்களை பெற்ற இந்த ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் 2017-ல் வெளிவந்தது.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

இந்த மை2017 நிஸான் மைக்ரா மாடல், ஃபாலோ-மீ செயல்பாட்டுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை ஆரம்பிப்பதை அறிந்து செயல்படக்கூடிய வைபர்கள் மற்றும் ஸ்போர்டியான ஆரஞ்ச் நிறத்தில் கேபின் உள்ளிட்டவற்றை பெற்றிருந்தது.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

இதில் பொருத்தப்பட்டு வந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 76 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது. இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 63 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்தது.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

சன்னி மாடலை பொறுத்தவரையில், காம்பெக்ட் செடான் ரக காரான இதனை நிஸான் நிறுவனம் முதன்முதலாக சீனாவில் 2010ல் நடைபெற்ற குவாங்சோ சர்வதேச மோட்டார் கண்காட்சியின் மூலமாக அறிமுகப்படுத்தி இருந்தது. இந்தியாவில் இந்த கார் கடந்த 2011லும், பிறகு இதன் அப்டேட் வெர்சன் 2017லும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மைக்ரா, சன்னி மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது நிஸான்..!

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த செடான் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 134 என்எம் டார்க் திறனில் இயங்கும் ஆற்றல் கொண்டது. இதன் டீசல் என்ஜின் 85 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan discontinues Micra, Sunny in India; lists only 2 cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X