'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நிஸான் டெரானோ கார் சந்தையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இது கார் கஸ்டமைஸ் செய்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

கடந்த 2013ம் ஆண்டு நிஸான் டெரானோ எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 2012ம் ஆண்டு எஸ்யூவி மார்க்கெட்டில் முதலாவதாக களமிறங்கி சூப்பர் ஹிட் அடித்த ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் மாடலாக நிஸான் டெரானோ களமிறக்கப்பட்டது.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் விலையும் சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது. புதிய கார் வாங்கி அலங்கரித்து பார்க்க ஆசைப்படும் எஸ்யூவி பிரியர்களுக்கு இந்த எஸ்யூவி சிறப்பான தேர்வாக இருந்து வந்தது. எனினும், நிஸான் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்ற நிலை தொடர்ந்தது.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

இந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நிஸான் இந்தியா இணையதளத்தில் விற்பனை பட்டியலில் இருந்து டெரானா நீக்கப்பட்டுள்ளது.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதுடன், அதற்கு ஈடாக விற்பனை இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே, நிரந்தரமாக டெரானோவை கழற்றிவிட நிஸான் முடிவு செய்துள்ளது. அதாவது, பிஎஸ்6 விதிகளால் சந்தையிலிருந்து விலக்கப்பட்ட பல கார் மாடல்களின் பட்டியலில் இப்போது டெரானோவும் இணைந்துள்ளது. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

நிஸான் டெரானா எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 148 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

டீசல் மாடலானது இரண்டு விதமான தேர்வுகளில் கிடைத்து வந்தது. ஒரு மாடலானது 84 பிஎச்பி பவரையும், மற்றொன்று 109 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனில் கிடைத்தது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வந்தது. இந்த எஞ்சின்கள் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படவில்லை.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

மேலும், நிஸான் டெரானோவுக்கு போதிய சந்தை இல்லாத நிலையில், கிக்ஸ் எஸ்யூவியை வைத்து டெரானோ இழப்பை ஈடுகட்டும் முடிவில் நிஸான் உள்ளது. இதற்காக, கிக்ஸ் எஸ்யூவியில் மிகவும் சக்திவாய்ந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை விரைவில் வழங்க இருக்கிறது நிஸான் நிறுவனம்.

'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ

இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அத்துடன், ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்6 மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் கிக்ஸ் எஸ்யூவியில் கொடுக்கப்பட இருக்கிறது. எனவே, நிஸான் டெரானோவின் வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India has silently removed the Terrano SUV from its official website. The Nissan Terrano failed to receive any BS6 update ahead of the deadline, which came into effect on the 1st of April 2020.
Story first published: Monday, May 4, 2020, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X