புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக நிஸான் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ரகத்தில் விற்பனையில் இருக்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என அனைத்து மாடல்களுமே சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகின்றன.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

இதன் காரணமாக, இந்த சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அனைத்து கார் நிறுவனங்களுமே முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. கியா மோட்டார்ஸ் நிறுவனம் கூட இந்த ஆண்டு பிற்பாதியில் சொனெட் என்ற பெயரில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளது.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

இந்த வரிசையில், தற்போது நிஸான் கார் நிறுவனமும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எஸ்யூவியானது நிஸான் நிறுவனத்தின் பிரபலமான பேட்ரல், பாத்ஃபைன்டர், அர்மதா, எக்ஸ்-ட்ரெயில், ஜூக், காஷ்கய், கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களின் டிசைன் அம்சங்கள் கையாளப்பட்டு இருக்கும்.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

மேலும், இந்தியாவுக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்படும் முதல் நிஸான் கார் மாடலாகவும் இந்த எஸ்யூவி தெரிவிக்கப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்படுகிறதாம்.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மிக மிக சொகுசான, அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளதாக நிஸான் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

இந்த புதிய எஸ்யூவியானது 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் புதிய எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளை நிஸான் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிகிறது.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

சென்னை அருகில் ஓரகடத்தில் உள்ள ரெனோ - நிஸான் கார் ஆலையில்தான் இந்த புத்தம் புதிய எஸ்யூவி மாடல் உற்பத்தி செய்யப்படும். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புள்ளது.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

இந்த புதிய எஸ்யூவி புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருப்பதாகவும் நிஸான் தெரிவிக்கிறது. எனவே, இந்த புதிய பிளாட்ஃபார்மில் வேறு சில புதிய கார் மாடல்களையும் எதிர்பார்க்கலாம்.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

ஜப்பானில் உள்ள நிஸான் பொறியியல் வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதே பிளாட்ஃபார்மில் ரெனோ நிறுவனமும் புதிய எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.

புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது நிஸான்

இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக ஸ்டைலிஷான மாடலாக நிலைநிறுத்தவும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக நிலைநிறுத்த நிஸான் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan is planning to launch a new compact SUV in India and it will go on sale in the second quarter of this year.
Story first published: Monday, January 27, 2020, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X