"விரைவில் பொது போக்குவரத்து தொடங்கும்" - ஏழைகளின் வயிற்றில் பால்வார்த்த அமைச்சர் நிதின் கட்காரி...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் பொதுபோக்குவரத்துத்துறை மீண்டும் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்துத்துறைகளும் முன்பெப்போதும் இல்லாத அளவில் மிக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதிலும், வாகனம் மற்றும் வாகனம் சார்ந்த துறைகள் சந்தித்து வரும் பாதிப்புகள் கூடுதல் கடுமையானதாக இருக்கின்றது. இதனால், அரசுக்கும் பொருளாதார ரீதியிலான சிக்கல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

எனவே, நீண்ட காலமாக அமலில் இருக்கும் தேசியளவிலான ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்வு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனடிப்படையில், மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் லேசான தளர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த தளர்வானது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதியின் தன்மையைப் பொறுத்து வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுப்போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுப்போக்குவரத்து முடக்கத்தின் காரணமாக மக்களின் இயல்பு (அன்றாட) வாழ்க்கை தலை கீழாக மாறியிருக்கின்றது. குறிப்பாக, பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால் அவர்களின் வாழ்வாதரம் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதிலும் ஏழை, எளிய மற்றும் தினக் கூலி தொழிலாளர்களின் நிலை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல காரணங்களைக் கருத்தில் கொண்டு மிக விரைவில் அதிக பாதுகாப்பு விதிகளுடன் பொது போக்குவரத்துறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கடந்த புதன்கிழமை (நேற்று) அவர் கூறியதாவது, "பொதுபோக்குவரத்துத்துறை விரைவில் மீண்டும் தொடங்கப்படும். இதற்கான வழிமுறைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றது" என்றார்.

மேலும், "கோவிட்-19 வைரசின் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்கும் விதமாக தொடர் பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் தொடர் இணைப்பில் இருந்துவருவதாகவும்" நிதின் கட்காரி தெரிவித்தார்.

மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் எம்எஸ்எம்இ துறைகளின் அமைச்சரான நிதின் கட்காரியின் இந்த அறிவிப்பால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து தொடங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், அது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயேத் தொடங்கப்பட இருக்கின்றது.

குறிப்பாக, "கொரோனா வைரஸ் கூடுதல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்கின்ற வகையில் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளின்கீழ் பொது போக்குவரத்தைத் தொடங்கப்பட இருப்பதாக" அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் போக்குவரத்து நிறுவனங்களின் அனைத்து இன்னல்களையும் தான் அறிந்திருப்பாதகவும், அவர்களுக்கு அரசு சார்பில் முழு ஆதரவை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பயணிகள் வாகன சேவை நிறுவனங்கள் தயக்கமின்றி தங்களது சேவையைத் தொடங்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கான, கூடுதல் சில வழிமுறைகளைதான் அரசு தற்போது தயார் செய்து வருகின்றது.

இந்த வழிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டின் பல பகுதிகளில் பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படும். ஆனால், முன்பு இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பயணிகள் வாகனங்கள் இயக்கப்பட இருக்கின்றன.

எனவே, வாகனத்தை இயக்குபவர் கொரோனா பிரச்னை காரணமாக அதிகப்படியான பாதுகாப்பு கவசங்களை அணிந்து வாகனத்தை இயக்கலாம் என தெரிகின்றது. இதேபோன்று, பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகளும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சமூக இடைவெளியுடன் பயணிப்பது கட்டாயமாக்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைகளின் இயக்கத்தையும் மறு சீரமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

எனவே, அத்தியாவசிய பொருள்களாக கருதப்படாத காரணத்தால் நெடுஞ்சாலைகளில் தேங்கி நிற்கும் சரக்கு வாகனங்களில் புழுதியடைந்து வரும் புதிய வாகனங்கள், விற்பனைக்காக வெளியேற்றப்படும் என நம்பப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Public Transport Will Be Resume Soon: Nitin Gadkari. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X