கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... ஏன் தெரியுமா?

அரசின் அனுமதி இருந்தும் இளைஞர் ஒருவர் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றார்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடே பூட்டப்பட்ட நிலையில் இருக்கின்றது. இருப்பினும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதித்து வருகின்றன. இதேபோன்று, குறிப்பிட்ட காரணங்களுக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த பணியாளர்களையும் அவை சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதிக்கின்றன.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

அந்தவகையில், பீஹார் மாநிலத்தில் பணியாற்றி வந்த ஓர் இளைஞர் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு திரும்பியுள்ளார். குறிப்பிட்ட நாட்கள் கழித்து திரும்பி வந்த அந்த இளைஞரை அக்கிராம மக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்துள்ளனர். பீஹாரில் திரும்பி வந்த ஒரே காரணத்தைக் காட்டி அவர்கள் இத்தகைய கடுமையான நடவடிக்கையை இளைஞர் மீது மேற்கொண்டிருக்கின்றனர்.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

விநோதமான இன்னலுக்கு ஆளாகியிருக்கும் அந்த நபர் தோலபா கிரமாத்தைச் சேர்ந்த மதபதா பத்ரா என கண்டறியப்பட்டுள்ளது.

இவரை, வேறு மாநிலத்தில் இருந்து திரும்பி வந்ததன் காரணத்தால், மாநிலத்தின் எல்லைப் பகுதியிலேயே வைத்து தடுத்து நிறுத்திய அரசு பணியாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிட்டனர்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

மேலும், அவருக்கு ரத்த மாதிரிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து கொரோனா ஆய்விற்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை சொந்த கிரமாத்திற்கு திரும்பிச் செல்ல அரசு பணியாளர்கள் அனுமதித்தனர். ஆனால், வழியில் இடைமறித்த ஊர் மக்களோ, கொரோனா மீதிருக்கம் அச்சம் காரணமாக பத்ராவை ஊருக்குள் சேர்க்கமால், விரட்டியுள்ளனர்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

கிராம மக்களின் இந்த செயலால் கடும் இன்னல்களுக்கு ஆளாகினார் பத்ரா. குறிப்பாக உண்ணுவது, உறங்குவது என அனைத்தையும் காரிலேயே செய்யும் நிலைக்கு அவர் தற்போது தள்ளப்பட்டுள்ளார்.

பத்ரா ஓர் கேமிர மேன் ஆவார். இவர் கடந்த மே3ம் தேதி பணி நிமித்தமாக பீஹார் மாநிலத்திற்கு புறப்பட்டுள்ளார்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு திரும்பியுள்ளார். ஆனால், ஊருக்கு திரும்பிய பத்ராவிற்குாதன் தற்போது இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து "தப்பித்தோம் சாமி" என கிளம்பியவரை கிராமத்திற்குள்ளேகூட நுழையவிடாமல் கிராமவாசிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

அப்போது, தான் நலமாக இருப்பதாகவும், அரசு வழங்கிய சான்றையும் அவர் காண்பித்துள்ளார். ஆனால், கிராம மக்களோ சற்றும் ஒத்திசைக்கவில்லை. மேலும், அவரை விரட்டியடிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, உள்ளூர் காவல்நிலையத்தின் உதவியை பத்ரா நாடியுள்ளார். மேலும், போலீசாரின் உதவியுடன் அன்றைய தினம் வீட்டிலும் தங்கியிருக்கினார்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

ஆனால், மறு நாளே பத்ராவின் தந்தையைச் சூழ்ந்துக்கொண்ட கிராம மக்கள், அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அறியாமையாலும், அச்சத்தினாலும் செய்வதறியாமல் கிராம மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் அதிருப்தியடைந்த பத்ரா கிராமத்தின் அருகே நிறுவப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் முகாமிற்கு செல்ல ஒப்புக் கொண்டார்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

ஆனால், அந்த முகாமில் தங்க மனமில்லாமல், முகாமின் வளாகத்திற்கு காரை பார்க் செய்து அதில்தான் தற்போது தங்கி வருகின்ரார். குளியல் மற்றும் ஒரு சில தேவைகளுக்காக மட்டுமே காரை விட்டு அவர் வெளியே வருகின்றார். மற்றபடி உண்ணுவது, உறங்குவது என பிற அனைத்திற்கும் காரையே வீடாக அவர் பயன்படுத்தி வருகின்றார்.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

வீடு திரும்புவதற்கு அரசின் அனுமதியிருந்தும் பத்ரா தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது பத்ராவிற்கு மட்டுமின்றி அவரின் குடும்பத்தாருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்களின் கட்டாயத்தின் காரணமாக இன்னும் ஏழு நாட்களுக்கு காரிலேயே தங்கும் நிலை பத்ராவிற்கு ஏற்பட்டுள்ளது.

கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க?

இந்த முகமானது பத்ராவின் வீட்டிற்கு அருகில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், வீடு திரும்ப முடியமால் மற்றும் குடும்பத்தினருடன் உறவாட முடியாமல் பத்ரா மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார். போலீஸார் தலையிட்டும், வைரஸ் பாதிப்பில்லாத ஓர் நபரிடம் கிராம மக்கள் இவ்வாறு நடந்துக் கொண்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Odisha Youngster Forced To Sleep In Car By Villagers. Read In Tamil.
Story first published: Thursday, May 28, 2020, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X