Just In
- 9 min ago
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 10 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
Don't Miss!
- News
செங்கோட்டை வன்முறை.. பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை
- Movies
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகின் முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் எது தெரியும்? நிச்சயமா ஷாக் ஆவிங்க...
உலகில் முதல் ஆட்டோமொபைல் வாகனம் கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்பாக 1808ல் உருவாக்கப்பட்டது. உள் எரிப்பு என்ஜின் உடன் தயாரிக்கப்பட்ட இந்த வாகனத்தில் ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. அதன்பின் மூன்று சக்கரங்களுடன் கார் தயாரிக்கப்படுவதற்கு சில ஆண்டுகளாகின.
அவ்வாறு, காரையே சற்று பயந்துடன் சாலையில் பார்க்கப்பட்ட அந்த காலத்தில் துவக்கப்பட்ட சில கார் பிராண்ட்கள் தற்போதும் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. அவற்றில் முதல் 6 பிராண்ட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

6.லேண்ட் ரோவர்
1896ல் லங்காஷயர் நீராவி மோட்டார் நிறுவனம் என்ற பெயரில் இங்கிலாந்தில் துவங்கப்பட்ட லேண்ட் ரோவர் பிராண்ட்டில் இருந்து ஆரம்பத்தில் புற்களை வெட்ட பயன்படுத்தப்படும் நீராவி இயந்திரமும், நீராவி வேன்களும் தான் வெளிவந்தன. அதன்பின் பல பெயர்களுக்கு மாற்றப்பட்ட இந்நிறுவனம் இறுதியாக 1978ல் லேண்ட் ரோவர் என பெயர் பெற்றது.

1948ல் லேலேண்ட் மோட்டார்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததில் இருந்தே ரோவர் கார்கள் வெளிவர துவங்கிவிட்டன. 1951ல் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் தலைமுறை ஜார்ஜ் அவர்களால் லேண்ட் ரோவருக்கு ராயல் உத்தரவாதம் என்கிற அந்தஸ்து இங்கிலாந்தில் வழங்கப்பட்டது.

5.ஸ்கோடா ஆட்டோ
செக் குடியரசு நாட்டில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் 1895ல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் பை-சைக்கிள்களையும் மோட்டார்சைக்கிள்களையும் தான் தயாரிக்க ஆரம்பித்தது. அதன்பின் கார்களின் தயாரிப்பில் 1905ல் தான் ஸ்கோடா ஆட்டோ இறங்கியது.

2000ல் மிக முக்கிய நடவடிக்கையாக ஃபோக்ஸ்வேகன் க்ரூப் உடன் கூட்டணி சேர்ந்த இந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசன் கார் ஒன்று 2011ல் பொன்னேவில்லே ஸ்பீடுவே-வில் 227kmph என்ற வேகத்தில் இயங்கி உலகின் வேகமான கார் என்ற சாதனையை படைத்தது. வட அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் ஸ்கோடாவின் தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

4.மெர்சிடிஸ்-பென்ஸ்
1883ல் கார்ல் பென்ஸ் மற்றும் கோட்லீப் டைம்லர் என்பவர்களால் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவப்பட்டது. டைம்லர் மோட்டார்ஸ் கார்ப்ரேஷன் என்ற மற்ற இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கலவையாக உருவான மெர்சிடிஸ்-பென்ஸ் பிராண்ட் தற்சமயம் உலகளவில் பிரபலமான கார் பிராண்ட்டாக விளங்கினாலும், 1926 வரையில் இந்த பிராண்ட்டின் பெயர் அதிகாரப்பூர்வ வெளியிடப்படவில்லை, அதாவது வேறொரு பெயரில் இருந்தது.

ஆரம்பத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மெஷின்களையும் வாயு என்ஜின்களையும் தான் மெர்சிடிஸ் பிராண்டில் தயாரித்து வந்துள்ளனர். இந்நிறுவனத்தில் இருந்து 1886ல் வெளிவந்த பென்ஸ் காப்புரிமை பெற்ற மோட்டார்வேகன் தான் உலகின் முதல் பெட்ரோல் வாகனமாகும். மூன்று சக்கரங்களுடன் இந்த வாகனத்தை கார்ல் பென்ஸ் தான் வடிவமைத்திருந்தார்.

3.ஒபல் ஆட்டோமொபைல் GmbH
ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் ஒபல் பிராண்ட்டை பற்றி தெரிந்திருக்கும். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் க்ரேட் பிரட்டனை தவிர்த்து மற்ற அனைத்து ஐரோப்பா நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டாலும், தற்சமயம் இந்தியாவில் எந்த ஒபல் காரும் விற்பனை செய்யப்படவில்லை.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒபல், 1862, ஜனவரி 21ஆம் தேதி நிறுவப்பட்டது. முதலில் தையல் இயந்திரங்கள் மட்டுமே இந்த பிராண்டில் இருந்து வெளிவந்த நிலையில் 1886ல் இருந்து பைசைக்கிள்களும், 1899ல் இருந்து கார்களும் வெளிவர துவங்கின. இதன் வாகனங்கள் வோக்ஸ்ஹால், ப்யூக் மற்றும் ஹோல்டன் என்ற பிராண்ட்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

2.தத்ரா
இக்னாட்ஸ் ஷுஸ்டலா & கம்பெனி என்ற பெயரில் 1850ல் நிறுவப்பட்ட தத்ரா பிராண்ட், தத்ரா ட்ராக் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இப்போது உள்ளது. குதிரை வண்டி தயாரிப்பில் முதலில் ஈடுப்பட்ட தத்ரா அதன்பின் 1891ல் இரயில்வழி கார்களை தயாரிக்க ஆரம்பித்தது.

1897ல் தத்ராவின் தொழிற்நுட்ப இயக்குனர் ஹ்யூகோ பிஷ்ஷர் வான் ரோஸ்லர்ஸ்டாம் என்பவர் பென்ஸ் ஆட்டோமொபைல் வாகனத்தை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தார். இதுவே தத்ரா நிறுவனத்தின் முதல் கார் பிரெஸிடண்ட் என்ற பெயரில் அதே ஆண்டில் வெளிவர காரணமாக இருந்தது. தற்சமயம் தத்ரா பிராண்டில் இருந்து பயணிகள் கார்கள் எதுவும் வெளிவருவதில்லை, 1999லேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ட்ரக்குகள் மட்டுமே வெளிவருகின்றன.

1.பியூஜியோட்
அர்மண்ட் பியூஜியோட் என்பவரது குடும்பத்தினரால் பியூஜியோட் 1810ல் காஃபி ஆலை நிறுவனமாக துவங்கப்பட்டது. அதன்பின் 1830ல் இருந்து பைசைக்கிள்களை தயாரிக்க இந்நிறுவனம் முன்வந்துவிட்டாலும், கார்களின் தயாரிப்பில் 1882ல் இருந்து தான் ஈடுப்பட துவங்கியது.

லியோன் செர்போல்லெட் என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு பொறியியலாளரின் சிந்தனைகளுடன் பியூஜியோட்டின் முதல் கார் 1889ல் விற்பனைக்கு வந்தது. உள் எரிப்பு காரை 1890ல் பான்ஹார்ட்-டைம்லர் என்ஜின் உடன் பியூஜியோட் குடும்பத்தினர் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

1926ல் மோட்டார்சைக்கிள்களுக்கென தனி பிரிவு இந்நிறுவனத்தில் பிரிக்கப்பட்டது. ஐந்து ஐரோப்பிய கார் விருதுகள், இரு செம்பரிட் ஐரிஷ் கார் விருதுகள் மற்றும் நான்கு ஆட்டோ ஐரோபா விருதுகளை பியூஜியோட் பெற்றுள்ளது. தற்சமயம் பியூஜியோட், க்ரூப் பிஎஸ்ஏ-வின் ஒரு அங்காக உள்ளது.

இந்த 6 பிராண்ட்களை தொடர்ந்து அடுத்தத்தடுத்ததாக நிறுவப்பட்ட ரெனால்ட், ஃபியாட் மற்றும் காடிலாக் பிராண்ட்களும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 1942ல் துவங்கப்பட்டது.