செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

ஒமெகா சீகி நிறுவனம் ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி ஆகிய ரகங்களில் பயன்படுத்தக்கூடிய மின்சார மூன்று சக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

ஒமெகா சீகி மொபிலிட்டி (Omega Seiki Mobility) நிறுவனம் புதன் அன்று பயணிகள் மற்றும் வர்த்த ரீதியில் பயன்படுத்தக்கூடிய மூன்று புது முக மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின்சார வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது.

செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

இதனையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மின் வாகன இயக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய வசதிகளில் ஒன்றான சார்ஜிங் மையங்களை நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

இந்த நிலையிலேயே ஒமெகா சீகி நிறுவனம், அதன் மூன்று புதுமுக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் ஆங்கிலியன் ஒமெகா குழுமத்தின் அங்கமாகும். இதுவே, சன் ஆர் (மூன்று சக்கரங்கள் கொண்ட கார்கோ ஆட்டோரிக்ஷா), ரைட் (இ-ரிக்ஷா), ஸ்ட்ரீம் (பாசஞ்ஜர் சேவையில் பயன்படுத்தப்பட கூடிய ஆட்டோ ரிக்ஷா) ஆகிய புதுமுக மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

தற்போது இந்த வாகனங்களுக்கான புக்கிங் நடைபெற்று வருவதாகவும், வருகின்ற மார்ச் மாதம் முதல் இதனை டெலிவரி வழங்கப்படும் எனவும் ஒமெகா சீகி அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் வாகனங்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிக ரேஞ்ஜை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமகம் செய்யப்பட்டு வருகின்றன.

செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

இந்த நிலையிலேயே ஒமெகா சீகி இந்தியர்களைக் கவரும் வகையில் கமர்சியல் மற்றும் வர்த்தக பிரிவுகளைக் கலக்கும் வகையில் 3 மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார வாகனங்களின் ரேஞ்ஜ் மற்றும் பிற சிறப்பு வசதிகள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...

இருப்பினும், இவை அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் ஓடும் திறனில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வாகனங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வைத்து கட்டமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆகையால், அரசின் மானியம் திட்டம் இதற்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Omega Seiki Unveils Sun Ri, Ride & Stream Electric Three Wheelers In India. Read In Tamil.
Story first published: Thursday, November 26, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X