Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜன்னலை திறந்துவிட்டு காரை ஓட்டுவது இவ்ளோ ஆபத்தானதா? இது தெரிஞ்சா இனி இந்த தவற செய்யவே மாட்டீங்க..!
ஜன்னலை திறந்து வைத்தவாறு காரை ஓட்டுவது எவ்ளோ ஆபத்தானது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காற்று மாசுபாடு, இது ஒட்டுமொத்த உலகிற்குமே பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது. நகர மயமாக்கல் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் ஒவ்வொரு திட்டமும் ஏதேனும் ஒரு வழியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அமைந்து விடுகின்றன.

இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவு அதிகரித்து காணப்படுமின்றி. இதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏழு மில்லியன் மக்கள் காற்று மாசால் இறப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவிக்கின்றது. மேலும், பத்தில் 9 பேர் அதிக மாசுற்ற காற்றையே சுவாசிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

எனவே, எதிர்காலத்தில் மாசுற்ற காற்றை சுவாசிப்பதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரபல பல்கலைக்கழகமான சர்ரே (University of Surrey) ஓர் அதிச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவெளியிட்டுள்ள தகவலின்படி, காற்று வாங்கும் விதமாக காரின் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு பயணிப்போர்களில் 80 சதவீதம் பேர் அதிக மாசுற்ற காற்றை சுவாசிப்பதாகவும், இவர்களே உடல் நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையம் (Global Centre for Clean Air Research) என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளுடைய முக்கிய நகரங்களைத் தேர்வு செய்து பல்கலைக்கழகம் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கின்றது. இதில், இந்தியாவிற்கான நகரமாக தமிழகத்தின் சென்னை தேர்வு செய்யப்பட்டு, சுத்தமான காற்றுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஒட்டுமொத்தமாக உலகின் பத்து நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதில், டாக்கா (வங்காளம்), குவாங்சோ (சீனா), மெடலின் (கொலம்பியா), சாவோ பாலோ (பிரேசில்), கெய்ரோ (எகிப்து), சுலைமானியா (ஈராக்), அடிஸ் அபாபா (எத்தியோப்பியா), பிளான்டைர் (மலாவி) மற்றும் டார்-எஸ்-சலாம் (தான்சானியா) ஆகிய நகரங்களும் அடங்கும்.

அந்தந்த நகரங்களில் ஆராய்ச்சியாளர்கள் காலை, மாலை மற்றும் மதியம் என வெவ்வேறு விதமான நேரங்களில் காரின் மூலம் பயணித்து தங்களை ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கின்றனர். எந்தெந்த நேரங்களில் என்ன அளவு மாசு வெளியாகின்றது என்பதை அறிந்துக்கொள்ளும் விதமாக வெவ்வேறு நேரங்களில் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

அப்போது, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகபட்சமாக பிஎம்2.5 மற்றும் பிஎம்10 என்ற மாசுபாட்டை அளவை அவர்கள் மாசை குறியிடும் கருவிகள் மூலம் கண்டறிந்திருக்கின்றனர். குறிப்பாக, காரின் ஜன்னல்கள் திறந்திருக்கின்ற நேரத்தில் பல மடங்கு மாசின் அளவு உயர்வதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

அதிலும், பீக் ஹவர் எனப்படும் அலுவல் நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் தோன்றும் மாசின் அளவு அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற அளவிற்கு உயர்ந்திருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, பிஸியான நேரங்களில் காற்று மாசின் அளவு சரசரவென 91 சதவீதத்திலும், போக்குவரத்து குறைவான நேரத்தில் 40 சதவீதத்திலும் இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

குறிப்பாக, ஏழை நாடுகளில் மாசின் அளவு மிகுந்த உச்சத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஜன்னல்கள் முழுமையாக அடைக்கப்பட்ட கார்களில் மாசின் அளவு மிக மிகக் குறைந்திருப்பதையும் அவர்களையும் கண்டறிந்திருக்கின்றனர். மேலும், காற்று வடிகட்டி மற்றும் சுத்திகரிப்பான் பயன்படுத்தப்படும் கார்களில் மாசின் அளவு மிக மிக கடுமையாக குறைந்திருப்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, பயணங்களின்போது காற்று வாங்க வேண்டும் என்பதற்காக காரின் ஜன்னல்களைத் திறக்கவே வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, காரின் ஜன்னல்களைத் திறக்கும் போது கண்களுக்கே புலப்படாத சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி கார் முழுவதும் நிரம்பிவிடுகின்றது. எனவே, ஓர் ஓட்டுநர் தனது பயணத்தின் மூன்று பகுதி பங்கினை மாசுபாட்டிற்கே இடையே செலவிடும் சூழல் உருவாகின்றது.

இது, சுவாசப்பாதை மற்றும் பிற பிரச்னை ஏற்பட வழிவகுக்கும். எனவேதான் இந்த புதிய ஆராய்ச்சி பயணத்தின்போது ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டாம் என எச்சரிக்கின்றது. அதுமட்டுமின்றி, கார்களில் காற்று வடிகட்டி அல்லது சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தவும் அறிவுறுத்துகின்றது. இதுகுறித்து அது வெளியிட்டிருக்கும் முழுமையான தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுமட்டுமின்றி, அனைவரும் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறினால் மட்டுமே இந்த விவகாரத்தில் முழுமையான தீர்வு எட்ட முடியும் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்திருக்கின்றது. இதற்கான பணியில்தான் இந்தியா உட்பட பல நாடுகள் இறங்கியிருக்கின்றன. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.