இந்தியர்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.. உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்.. எப்போது?

உலகின் மிக மிக மலிவான விலையுடைய மின்சார கார் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வாகனங்கள் மாறியுள்ளன. இந்த வாகனங்கள் இல்லாமல் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையே அமையாது என்பது போன்ற சூழலே தற்போது நிலவுகின்றது. அதேசமயம், அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாட்டால் நாள்தோறும் அதைச்சார்ந்து ஏற்படும் ஆபத்துகளும் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பாக, உலகம் முழுதும் அதிகரித்து காணப்படும் எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையே பல்வேறு பின்விளைவுகளுக்கு முக்கியமான காரணியாக இருக்கின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

ஆகையால், எரிபொருள் வாகனங்களின் இடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக மின்வாகனங்களின் பயன்பாட்டை பல நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. எனவே, உலக நாடுகளின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக தற்போது மின்சார வாகனங்கள் மாறியுள்ளன. மின்வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படுவது மட்டுமின்றி குறைந்த பராமரிப்பில் அதிக பலனளிப்பவையாகவும் இருக்கின்றன. இதனால், பல உலக நாடுகள் தங்களின் மக்களை மின் வாகன பயன்பாட்டில் ஈர்ப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

ஆகையால், உலகில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் பார்வையை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியுள்ளனர். அந்தவகையில், சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸும் அதன் ஆதிக்கத்தை மின் வாகனச் சந்தையில் செலுத்த ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது சந்தையில் இருக்கும் மின் வாகனங்களைக்காட்டிலும் மிக மிக மலிவான அதாவது உலகிலேயே மிக மலிவான மின்சார கார் ஒன்றை களமிறக்க இருக்கின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

குறிப்பாக இந்த காரை இந்தியர்களைக் கவர்கின்ற வகையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கிரேட் வால் மோட்டார்ஸ் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வருகின்ற 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள வாகன கண்காட்சியில் இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

விரைவில் அறிமுகமாக காத்திருக்கும் அந்த கார், உலகின் மலிவு விலை கார் என கூறப்படுகின்றது. தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் மின் வாகனங்கள் அதீத விலையைக் கொண்டதாக காட்சியளிக்கின்றன. இதன்காரணமாகவே, பெரும்பாலான பட்ஜெட் வாகன விரும்பிகளுக்கு அவை எட்டாக் கனியாக மாறியுள்ளன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

மேலும், மத்திய அரசு வழங்கி வரும் மானியமும் பெரியளவில் பலனளிக்காத சூழலே நிலவுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட சீன நிறுவனம், கிரேட் வால் மோட்டார்ஸ், உலகின் மலிவு விலை மின்சார காரை, ஓரா என்னும் பிராண்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

ஓரா ஆர்1 என்று அழைக்கப்படும் இந்த கார் சமீபத்தில்தான் சீனாவில் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த ஓரா பிராண்டில் ஆர்1, ஆர்2 மற்றும் ஐக்யூ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்1 மற்றும் ஆர்2 மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன. ஆனால், ஐக்யூ மாடல் மட்டும் உற்பத்தி பணிக்கான மேம்படுத்துதலைப் பெற்று வருகின்றது. இதுவும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

இந்தியாவில் விரைவில் கிரேட் வால் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் மலிவு விலைக் கொண்ட மாடலாக மட்டுமின்றி, அதிக பலனளிக்கும் மின்சார காராகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 351 கிமீ தூரம் வரை செல்லுகின்ற திறனை ஓரா ஆர்1 பெற்றிருக்கின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

இதற்காக, 35 கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் நெக்ஸான் மாடலில் டாடா அறிமுகம் செய்யவிருக்கும் எலெக்ட்ரிக் கார் 300 ரேஞ்சை வழங்கும் திறனைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

ஆனால், ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரோ இதைக் காட்டிலும் கூடுதலாக 51 கிமீ ரேஞ்சை வழங்குகின்றது. அதேசமயம், இதன் விலையும் ரூ. 6 முதல் 9 லட்சம் ரூபாய் வரையில்தான் இருக்குமென அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், தற்போது சீனாவில் விற்பனையில் இருக்கும் ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் கார்கள் அந்நாட்டு மதிப்பில் 59,800 மற்றும் 77,800 யுவான் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், இதைவிட சற்றே கூடுதல் விலையில் இந்த கார் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி இந்தியாவில் மற்றுமொரு பிரமாண்ட மாடலை களமிறக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், ஜாம்பவான் நிறுவனமான டாடாவின் ஹாரியர் எஸ்யூவி இடத்தைப் பிடிக்கின்றத வகையில் ஹவல் எஸ்யூவி ரக காரை விரைவில் களமிறக்க உள்ளது. இந்த காரும் எஸ்யூவி ரகத்தில் சந்தையில் காணப்படும் கார்களைவிட குறைந்த விலையில் களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

அதேசமயம், இந்த காரில் பல்வேறு பிரிமியம் வசதிகளும் இடம்பெறவிருக்கின்றது.

இது டாடா ஹாரியர் மட்டுமின்றி தற்போது விற்பனையில் புதிய உச்சத்தைப் பெற்றிருக்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை... உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்... எப்போது..?

கிரேட் வால் மோட்டார்ஸ் இதில் ஹவல் எச்6 மாடலை இந்தியச் சாலைகளில் வைத்து பல பரீட்சை செய்து வருகின்றது. ஆகையால், இந்த கார் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஆனால், இந்த எலெக்ட்ரிக் கார் மட்டும் நடப்பாண்டின் இடையில்தான் களமிறங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், அதற்கு முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும். இதனை உறுதி செய்கின்ற வகையிலேயே தற்போது அது டுவிட்டர் தகவலை வெளியிட்டுள்ளது.

Most Read Articles
English summary
‘ORA R1’ India Debut At 2020 Auto Expo. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X